சுரண்டை அருகே சுந்தரபாண்யடிபுரம் நகர பஞ்சாயத்துக்கு உட்பட்ட சாலைகளை சீரமைக்க உடனடியாக நிதி ஒதுக்க வேண்டும் என நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கேஎன்.நேருவிடம் முன்னாள் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் கோரிக்கை மனுவை நேரில் வழங்கியுள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:- சுந்தரபாண்டிபுரம் நகர பஞ்சாயத்து பகுதியில் உள்ள சாலைகளை சீரமைக்கவும், வாறுகால் அமைக்கவும் ரூ.5 கோடியே 21லட்சத்து 48 ஆயிரம் திட்ட மதிப்பீடு தயார் செய்து நிதியை பெற்று தர வேண்டும் என சுந்தரபாண்டியபுரம் நகர பஞ்சாயத்து தலைவர் காளியம்மாள் செல்வகுமார் கோரிக்கை மனு வழங்கியிருந்தார். அந்த கோரிக்கை மனுவில்
சுந்தரபாண்டிபுரத்தில் இருந்து சாம்பவர்வடகரை செல்லும் சாலையில் தார் சாலை மற்றும் தடுப்பு சுவர் அமைக்கவும், தட்டான்குளம் மெயின் ரோட்டில் தார்சாலை அமைக்கவும், குளத்தடி தெருவில் பேவர் பிளாக் சாலை அமைக்கவும், வார்டு 5 மற்றும் 13வது வார்டு நாடார் தெருவில் பேவர் பிளாக் சால அமைக்கவும், வார்டு 11 காலனி தெருவில் பேவர் பிளாக் சாலை அமைக்கவும், வண்ணார் தெருவில் பேவர் பிளாக் சாலை அமைக்கவும், முக்குச்சாமி கோவில் தெருவில் வாறுகால் அமைக்கவும், சாஸ்தான் கோவில் தெருவில் பேவர் பிளாக் சாலை அமைக்கவும், ஆலவாய்க்கால் தெருவில் சாலை அமைக்கவும் தயார் செய்யப்பட்ட திட்ட மதிப்பீடு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. சுந்தரபாண்டியபுரம் பேரூராட்சி பொதுமக்களின் நலன் கருதி மேற்படி சாலைகளை சீரமைக்கவும், வாறுகால் அமைக்கவும் உடனடியாக நிதி ஒதுக்க வேண்டும் என அந்த கோரிக்கை மனுவில் அவர் கூறியுள்ளார்.
நிகழ்ச்சியின் போது மாவட்ட அவைத் தலைவர் சுந்தர மகாலிங்கம், பொதுக்குழு உறுப்பினர்கள் சாமிதாதுரை, கதிர்வேல், முன்னாள் கடையநல்லூர் ஒன்றிய கழகச் செயலாளர் காசி தர்மம் துரை, மாவட்ட பிரதிநிதி ஸ்டீபன் சத்யராஜ், சிங்கிலி பட்டி ஒன்றிய கவுன்சிலர் மணிகண்டன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்
