
தேனி அருகே அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்கத்தின் கீழ் மாற்று திறனாளிகள் மற்றும் நலிவுற்றோருக்கான தேவைகள் கண்டறியும் முகாம் அரசு மருத்துவமனையில் நடைபெற்றது .இம்முகாமில் ஏராளமான பயனாளிகள் பங்கேற்று பல்வேறு உதவிகளை பெற கலந்து கொண்டனர். மருத்துவர் குழு மூலம் பயனாளிகளுக்கு ஆய்வு செய்து இரண்டாம் நிலை மூன்றாம் நிலை ஆய்வுக்கு பரிந்துரை செய்துள்ளனர்.இம்முகாமில் மாவட்ட மாற்று திறனாளி அலுவலர் காமாட்சி குழுவினர், உதவி திட்ட அலுவலர் அறிவழகன், மகளிர் திட்டத்தின் குழுவினர் வட்டார மேலாளர் ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.இந்த முகாமில் பொதுமக்கள் ஏராளமானவர்கள் பங்கேற்று பயன் பெற்றனர்