
சேலம் மாநகராட்சி 9-வது கோட்ட கவுன்சிலர் தெய்வலிங்கம் தனது திருமண நாளை முன்னிட்டு புதியதாக துவங்கப்பட்டுள்ள “தெய்வா அறக்கட்டளை” சார்பில் பொன்னம்மாபேட்டை புத்துமாரியம்மன் கோவிலில் “தெய்வத்தின் வாசலில் காலை சிற்றுண்டி” என்ற தலைப்பில் தினமும் சிற்றுண்டி வழங்கும் எளிய விழா நடைபெற்றது.முதல் நாள் நிகழ்வாக தனது திருமண நாளை முன்னிட்டு சுமார் 200 நபர்களுக்கு கோவில் தர்மகர்த்தா முன்னிலையில் ஊர் கவுண்டர் பன்னீர்செல்வம் துவக்கி வைத்து சிற்றுண்டி வழங்கப்பட்டது.