
நிலையான வணிகத் தீர்வுகளில் முன்னோடியாக விளங்கும் ரீஃபெக்ஸ் குழுமம் (Refex
Group), சென்னை, தி லீலா பேலஸ் வளாகத்தில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின்
உலகளாவிய காம்பேக்ட் நெட்வொர்க் இந்தியா (UN GCNI)-வின் 19-ஆவது தேசிய
மாநாட்டு நிகழ்வில் அதன் தலைமைத்துவத்தையும் பொறுப்பான வணிக
நடைமுறைகளுக்கான அர்ப்பணிப்பையும் வலுப்படுத்தியது. நிலைப்புத்தன்மை, நிதி
மற்றும் கொள்கை ஆகிய செயற்பிரிவுகளில் தேசிய அளவிலும் மற்றும் உலக
அளவிலும் பிரபலமான தலைவர்களை ஒருங்கிணைந்த இந்த இரு நாள் மாநாட்டு
நிகழ்வில் ரீஃபெக்ஸ் குழுமம் முன்னணி செயற்பாட்டாளராக முனைப்புடன்
பங்கேற்றது. நிலைப்புத்தன்மையுடன் கூடிய வளர்ச்சி, காலநிலை மாற்றத்திற்கு
எதிரான நடவடிக்கை மற்றும் நன்னெறி சார்ந்த பிசினஸ், நேர்மை ஆகிய தலைப்புகள்
மீது தாக்கம் ஏற்படுத்தும் கலந்துரையாடல்களை ரீஃபெக்ஸ் குழுமம் முன்னெடுத்தது.
பிசினஸ் நேர்மை கருத்தரங்கு மற்றும் வருடாந்திர மாநாடு ஆகிய இரு செயல்
நடவடிக்கைகளுக்கும் அதிகாரப்பூர்வ அமைப்பாளராக செயலாற்றிய ரீஃபெக்ஸ்
குழுமம், ஐக்கிய நாடுகள் சங்கத்தின் நிலைப்புத்தன்மையுள்ள வளர்ச்சி இலக்குகள் (UN
SDGs) மீது தனது பொறுப்புறுதியை மீண்டும் உறுதி செய்திருக்கிறது. ரீஃபெக்ஸ்
குழுமத்தின் நிர்வாக இயக்குனரும், இம்மாநாட்டு நிகழ்வின் அமைப்பாளருமான திரு.
அனில் ஜெயின் இந்நிகழ்வின் தொடக்கத்தில் வரவேற்புரையை வழங்கினார்.
அதைத்தொடர்ந்து நடைபெற்ற அர்த்தமுள்ள விவாதங்களுக்கும் மற்றும்
நிலைப்புத்தன்மையும், மீட்சித்திறனும் கொண்ட எதிர்காலம் என்ற குறிக்கோளுக்கான
பெருநிறுவனங்களின் பொறுப்புறுதிகளுக்கும் சரியான மேடையை அவரது
வரவேற்புரை அமைத்துத் தந்தது.
“பிசினஸ் நிறுவனங்கள் என்பவை, அர்த்தமுள்ள மாற்றத்திற்கு வெறுமனே
பங்களிப்பவர்களாக மட்டும் இல்லாமல், மற்றவர்களையும் இதில் ஈடுபடச் செய்யும்
வினையூக்கி நபர்களாக இருக்க வேண்டும் என்ற கோட்பாட்டில் நீண்டகாலமாக
ரீஃபெக்ஸ் குழுமம் நம்பிக்கை கொண்டு செயல்பட்டு வருகிறது. புதுப்பிக்கத்தக்க
ஆற்றல், பசுமை போக்குவரத்து, தொழிலக கழிவு மேலாண்மை, காற்றாலை
மின்சாரத்திற்கான டர்பைன் உற்பத்தி, சாம்பல் அகற்றல் மற்றும் சுகாதாரப் பராமரிப்பு
ஆகிய பல்வேறு பிரிவுகளில் எமது நிலைப்புத்தன்மையுள்ள பிசினஸ் மாடல்,
சுற்றுச்சூழல் சார்ந்த பராமரிப்பு பணி, பொருளாதார மதிப்பு உருவாக்கம் மற்றும் சமூக
உள்ளடக்கம் ஆகியவற்றின் மீது நாங்கள் கொண்டிருக்கும் அர்ப்பணிப்பிற்கு ஒரு
சிறந்த சாட்சியமாக திகழ்கிறது.” என்று தனது வரவேற்புரையில் திரு. ஜெயின்
குறிப்பிட்டார்.
நிலைப்புத்தன்மையுள்ள பொருளாதார வளர்ச்சியில் தலைவராக தமிழ்நாடு மாநிலம்
உருவெடுத்து வரும் நிலையில், தனது பிசினஸ் மாடலை தேசிய மற்றும் உலகளாவிய
முன்னுரிமைகளுக்கு இணக்கமானதாக ஒருங்கிணைப்பதன் வழியாக
நிலைப்புத்தன்மைக்கான செயற்பரப்பை ரீஃபெக்ஸ் குழுமம் முனைப்புடன்
வடிவமைத்து வருகிறது. குறைந்த விலையில் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும்
முதல் எம்.ஆர்.ஐ. இயந்திரம் (அனமயா) மற்றும் இதன் முன்னோடித்துவமான
மின்னாற்றலில் இயங்கும் போக்குவரத்து சேவைகள் போன்ற இந்நிறுவனத்தின்
முக்கியமான முன்னெடுப்புகள், புத்தாக்கத்தால் இயக்கப்படும் நிலைப்புத்தன்மை மீது
இக்குழுமம் கொண்டிருக்கும் அர்ப்பணிப்பிற்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது.