
சென்னை : ஜெர்மன் விசேஷ ரசாயனங்கள் நிறுவனமான LANXESS ஆனது இன்று தன் இந்தியா அப்ளிகேஷன் டெவலப்மென்ட் சென்டரை (இந்திய பயன்பாட்டு உருவாக்க மையம்) மும்பையின் தானேவில் தொடங்கியுள்ளது. இது அதன் ஆக்கப்புத்தாக்க மற்றும் வாடிக்கையாளர் சேவை திறன்களை வலுப்படுத்தும். LANXESS ஹவுசில் ஒரு முழு தளத்தையும் ஆக்கிரமித்துள்ள இந்த மையமானது எதிர்கால விரிவாக்க திறனுடன் கூடி இரண்டு வர்த்தக பிரிவுகளுக்கு நிலைமையமாக செயல்படும்.
“இந்தியா ஆனது LANXESS-க்கு ஒரு அதிமுக்கிய வளர்ச்சி பிராந்தியமாகும் ஏனெனில் இது கூட்டுமுயற்சி மற்றும் ஆக்கப்புத்தாக்கத்திற்கு கணக்கற்ற வாய்ப்புகளை வழங்குகிறது,” என்று LANXESS AG இன் நிர்வாக வாரியத்தின் தலைவரான மத்தியாஸ் ஜாசெர்ட் கூறினார்.
“IADC ஐ நிறுவுவதன் மூலம் நாங்கள் எங்கள் நிபுணத்துவத்தை இந்திய வாடிக்கையாளர்களுக்கு நெருக்கமாக எடுத்து வருகிறோம். இந்த மையம், ஆக்கபுத்தாக்கத்திற்கு ஆதரவு வழங்குவது மட்டுமல்லாமல் பரிணாம வளர்ச்சியடையும் சந்தை தேவைகளை விரைவாகவும் துல்லியமாகவும் பூர்த்தி செய்வதில் எங்கள் ஆற்றலுக்கு வலு சேர்க்கும்,” என்று LANXESS இந்தியாவின் துணை தலைவர் & நிர்வாக இயக்குனரான நமிதேஷ் ராய் சவுத்திரி கூறினார்.