
சென்னை, 21 பிப்ரவரி 2025: ஸ்ரீலெதர்ஸ், தரமான தோல் தயாரிப்புகளைவழங்கும் ஒரு முன்னணி காலணி நிறுவனம், நடத்திய ஆன்லைன் கோலம்போட்டியின் வெற்றியாளர்களுக்கு தனது ஸ்ரீலெதர்ஸ் புரசைவாக்கம் கிளையில் ஏற்பாடு செய்யப்பட்டவண்ணமிகு நிகழ்ச்சியில்பரிசுகள் வழங்கப்பட்டன.
தமிழகம் முழுவதும் இருந்து 2000 க்கும் மேற்பட்டபடைப்புகள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டன. இதில் தலைசிறந்த 50 கோல படைப்புகள் தேர்வு செய்யப்பட்டடு, வெற்றி பெற்ற ஒவ்வொருபடைப்புக்கும் வீட்டு உபயோக பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு, தலைமை விருந்தினராக, திருமதி மீரா நாகரஞ்சன், எம்.டி மற்றும் சிஇஓ, கல்யாணமாலை, கலந்து கொண்டார். திரு. சுஷாந்தோ டே, பங்குதாரர், ஸ்ரீலெதர்ஸ் மற்றும் திருமதி பூஜாரினிடே, பங்குதாரர், ஸ்ரீலெதர்ஸ் முன்னிலை வகித்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள்.
இந்த போட்டி தமிழ் கலை மற்றும் கலாச்சாரம் பெருமையை வளர்ப்பதைநோக்கமாக கொண்டு நடைபெற்றது. இப்போட்டி சிறப்பு மிகுந்த மார்கழிமாதத்தில், நடைப்பெற்றது. போட்டியாளர்கள் தங்களின் வண்ணமிகுகோலத்துடன் எடுத்து கொண்ட செல்ஃபீ புகைப்படத்தினை பகிர்ந்துகொள்ள தனி வாட்ஸ்அப் எண் வழங்கப்பட்டது. சிறந்த படைப்புகளை திருமதி பூர்ணிமா கணேசன் தேர்ந்தெடுத்தார்.
நிகழ்ச்சிக்கு, தலைமை விருந்தினராக, திருமதி மீரா நாகரஞ்சன், எம்.டி மற்றும் சிஇஓ, கல்யாணமாலை பேசுகையில், “நமது வளமான கலாச்சார பாரம்பரியத்தை கொண்டாடும் செல்ஃபி கோலம் போட்டி போன்ற முன்முயற்சிகள் நடைபெறுவது மகிழ்ச்சியளிக்கிறது. கலை மற்றும் படைப்பாற்றல் மூலம் மக்களை ஒன்றிணைப்பதில் ஸ்ரீலீதர்ஸ் பாராட்டத்தக்க பணியைச் செய்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.”
நிகழ்ச்சியில் பேசிய திரு. சுஷாந்தோ டே மற்றும் திருமதி பூஜாரினி டேபங்குதாரர்கள், ஸ்ரீலெதர்ஸ், “70 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள எங்களுக்கு இது சிறப்பான ஆண்டு ஆகும். SL பிரீமியம் மற்றும் SL ஸ்போர்ட்ஸ் என உப பிராண்டுகளையும் நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ளோம். நம் சமூகத்தில், அழகும் படைப்பாற்றலும், நம் கலைகள் மீது ஆழமாக வேரூன்றி இருப்பதை பிரதிபலிப்பதால் இக்கோலப்போட்டி நம் இதயங்களை கொள்ளை கொண்டுள்ளது. மாநிலத்தின் வளமான கலை மற்றும் கலாச்சாரத்தை ஊக்குவித்து வளர்ப்பதை நாங்கள் பாக்கியமாக உணர்கிறோம்”