
விழுப்புரம் காமராஜர் சாலையில் உள்ள தபால் நிலையம் அருகில் மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு தமிழ்நாடு சார்பில் மாவட்ட மாணவரணி செயலாளர் ஸ்ரீ வினோத் தலைமையில் மும்மொழி கொள்கை என்ற பெயரில் இந்தியை திணித்து மீண்டும் மொழிப்போர்க்கு நிர்ப்பந்திக்கும் பாஜக அரசே கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாவட்ட செயலாளர் சட்டமன்ற உறுப்பினருமான இலட்சுமணன், தெற்கு மாவட்ட செயலாளர் பொன் கௌதமசிகாமணி , பொருளாளர் ஜனகராஜ், மாநில ஆதிதிராவிடர் இணைச் செயலாளர் புஷ்பராஜ், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயச்சந்திரன், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் சுவை சுரேஷ் ,நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு, நகர செயலாளர் சக்கரை, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு துணை அமைப்பாளர் வழக்கறிஞர் சதீஷ், வர்த்தக அணி அமைப்பாளர் கோல்டு வெங்கடேசன், கோலியனூர் ஒன்றிய செயலாளர் தெய்வசிகாமணி, கோலியனூர் ஒன்றிய பெருந்தலைவர் சச்சதானந்தம் ,கண்டமங்கலம் ஒன்றிய செயலாளர் பிரபாகரன், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் குமரன் ,மாவட்ட இளைஞரணி செயலாளர் தினகரன், நகர இளைஞரணி செயலாளர் மணிகண்டன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வழக்கறிஞர் அகத்தியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.