
தென்காசி மாவட்டம் பாண்டியாபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி மற்றும் அரசு உயர்நிலை ஒரே வளாகத்தில் இயங்கி வருகின்றது. பள்ளிகளில் சுமார் 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
பாண்டியாபுரம் கிராம மக்கள் மற்றும் பெற்றோர்கள் ஒத்துழைப்புடன் தங்களது கிராம குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காக, தங்களது குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கு சுமார் 2 இலட்சம் மதிப்பிலான பொருட்களை பள்ளிக்கு பேரணியாக சென்று நேற்று கல்விச்சீர் வழங்கப்பட்டது. பள்ளிகளுக்கு தேவையான தளவாடச் சாமான்கள், ஆசிரியருக்கான சேர், சாக்பீஸ், பேப்பர் , மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள், எழுது பொருட்கள் மற்றும் விளையாட்டு பொருட்கள் என அனைத்து சீர்வரிசை பொருட்களுடன் ஊர்வலமாக சென்றனர்
இந்த ஊர்வலத்தை, மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) ஜெயபிரகாஷ் ராஜன் கொடியசைத்து துவக்கி வைத்தார். பள்ளிக்கு கல்விச்சீர் திருவிழா மற்றும் பள்ளி ஆண்டு விழாவிற்கு மேலநீலிதநல்லூர் வட்டார கல்வி அலுவலர் கவிதா தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் இளையபெருமாள் நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் இளையபெருமாள், ஸ்டீபன் ஞானராஜ், மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.