
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் நகர அதிமுக சார்பில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 77 – வது பிறந்த நாளை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளரும் முன்னாள் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான குமரகுரு ஆலோசனைப்படி நகர செயலாளர் ஆட்டோ ஸ்ரீதர் தலைமையில் அவருடைய திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கடைவீதியில் உள்ள 1000 – க்கு மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கி வெகு விமர்ச்சையாக கொண்டாடினர் இதனை தொடர்ந்து மாட வீதியில் உள்ள பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமம் ஆதரவற்ற முதியவர்கள் காப்பகத்திற்கு மதிய உணவு வழங்கி சிறப்பித்தார்.