
மலபார் கோல்டு & டைமண்ட்ஸ்-ன் CSR (கார்ப்பரேட் சமூக
பொருப்புணர்வு) நிகழ்ச்சி கும்பகோணம் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ்
கிளைகளின் சார்பாக கும்பகோணம் ஹரிதா மஹாலில் நடைபெற்றது. இந்த
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாண்புமிகு திரு.சு.கல்யாணசுந்தரம்
(கும்பகோணம் நாடாளுமன்ற உறுப்பினர்), கலந்து கொண்டு அரசு பள்ளி
மாணவிகளின் நலனிற்காகவும் அவர்களின் கல்வி இன்னையும், வாழ்க்கை
தரத்தையும் உயர்த்துவதற்காக இன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 25 அரசு
பள்ளிகளை சேர்ந்த 55 மாணவிகளுக்கு CSR (கார்ப்பரேட் சமூக பொருப்புணர்வு)
மலபார் குழுமம் சார்பாக மொத்தம் சுமார் ரூபாய்.-4,80,000/- (நான்கு இலட்சத்து
என்பது ஆயிரம் ரூபாய்), மதிப்பிலான காசோலையை மாணவிகளுக்கு
வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் திரு.தமிழ்அழகன் (கும்பகோணம் மாநகராட்சி
துணை மேயர்), திரு.சுந்தர் (கும்பகோணம் மாவட்ட கல்வி அலுவலர்), மற்றும்
திரு.யாசர் அராபத் (மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் கும்பகோணம் கிளை துணை
தலைவர்), திரு.பாலமுருகன் (மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் கும்பகோணம் கிளை
மேலாளர்), ஆகியோர் உடனிருந்தார். இவை தவிர மலபார் கோல்டு & டைமண்ட்ஸ்
நிறுவனத்தின் வெற்றிகரமான வணிகத்திற்கு அதன் சமூகப்பொறுப்பு முன்முயற்சிகள்
இதரகாரணங்கள் ஆகும். தனது லாபத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை சுகாதாரம், கல்வி,
வீட்டு வசதி, சுற்றுச்சுழல் பாதுகாப்பு, மற்றும் மகளிரை அதிகாரமயமாக்குதல் என
சமூக பொறுப்பு திட்டங்களுக்கு செலவு செய்கிறது.