
அறுபடை வீடுகளில் சிறந்து விளங்கும் ஐந்தாம் படை என போற்றப்படும் புகழ்பெற்ற புண்ணிய ஸ்தலமான திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆண்டு தோறும் மாசி பெருவிழா அதி விமர்சையாக நடைபெறுவது வழக்கம்
இந்த ஆண்டுக்கான மாசிப்பெருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. மங்கள வாத்தியங்கள் முழங்க அதிகாலையில் கொடியேற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கோயில் அறங்காவலர்கள்.மு.. நாகன்.வி. சுரேஷ்பாபு. ஜி. உஷாராவி. மற்றும் கோயில் அதிகாரிகள் கலந்து கொண்டனர்விழாவை முன்னிட்டு மூலவர் கடவுளுக்கு சிறப்பு அபிஷேக நடத்தி பூஜைகள் நடைபெற்றன.
தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தேர்வீதியில் அன்ன வாகனம், புலி வாகனம், வெள்ளி மயில் வாகனம், சிங்க வாகனம், ஆட்டுக்கிடா வாகனம், யானை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் வள்ளி தெய்வயானை சமேதராய் முருகப்பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
இவ்விழாவில் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் விழா வருகிற9 ம் தேதியும், மறுநாள் 10 ம் தேதி வள்ளியம்மை திருக்கல்யாணமும் நடைபெற உள்ளன. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்து செய்து வருகின்றனர்….