
கள்ளக்குறிச்சி மாவட்டம் ,சின்னசேலம் அடுத்த ,குரால் கூட்ரோடு சின்னசேலம் பிரிவு சாலை, அருகே வாகன விபத்து ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே இரண்டு பேர் இறப்பு.
சம்பவத்தன்று ,சின்னசேலம் அடுத்த வி.அலம்பலம் கிராமத்தின் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த, பழனிவேல் வயது (40 ) த/பெ பூமாலை என்பவரும், அதே பகுதியைச் சேர்ந்த ,பெரியசாமி வயது (24 )த/பெ சோலைமுத்து என்பவரும் ,பக்கத்து பக்கத்து வீடு என்பதால்,
வி.அலம்பலத்திலிருந்து(TN 15 M 7024) பதிவு எண் கொண்ட ,பழனிவேல் இருசக்கர வாகனத்தில், சின்னசேலத்தில் இருந்து ,பெரியசாமி என்பவர் ,சென்னைக்கு வேலைக்கு செல்பவரை, பேருந்தில் ஏற்றி விட, குரால் கூட்ரோடு ,சின்னசேலம் பிரிவு சாலையில் திரும்பும் பொழுது ,தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த காரியமங்கலம் தாலுக்கா ஹட்டூர் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் சதீஷ் ( 23 ) த/பெ சேட் என்பவர் (TN 29 BM 3462 )பொலிரோ பிக் அப் வாகனத்தில், கும்பகோணத்திலிருந்து காய்கறி ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த, பொலிரோ பிக்அப்பை, ஓட்டுநர் அதிவேகமாக ஓட்டி வந்து, இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில், பொலிரோ பிக்அப் வாகனம் ,சாலையின் ஓரம் கவிழ்ந்து விட்டது. இச்சம்பவத்தில் ,பழனிவேல் மற்றும் பெரியசாமி இருவரும் தலையில் அடிபட்டு, சம்பவ இடத்திலேயே ,இறந்துவிட்டனர். இறந்தவரின் உடலை ,சின்னசேலம் காவல் ஆய்வாளர் ஏழுமலை அவர்கள், கைப்பற்றி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை சவக்கிடங்கிற்கு ,அனுப்பி வைத்தார். மேலும் இச்சம்பம் தொடர்பாக காவல் ஆய்வாளர் அவர்கள் விசாரணை செய்து வருகிறார்.