
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம் வடக்கனந்தல் பேரூராட்சியின் அம்மாபேட்டை பகுதியில் கலைஞர் நகர்ப்புர மேம்பாட்டு திட்டம் அம்ரூத் 2.0-ன் கீழ் ரூபாய் 24-லட்சம் மதிப்பீட்டிலான சிறுவர் பூங்காவினை சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் தா. உதயசூரியன் தலைமையில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ் பிரசாந்த் அவர்கள் திறந்து வைத்தார்.
இவ்விழாவில் பேரூராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வம், துணைத்தலைவர் தண்டபாணி, சின்னசேலம் ஒன்றிய குழு துணை தலைவர் அன்புமணிமாறன், பேரூராட்சி உதவி இயக்குனர் கடலூர் மண்டலம் வெங்கடேசன், பேரூராட்சி உதவி செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், செயல் அலுவலர் ரஞ்சித், இளநிலை பொறியாளர் நடராஜன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், திமுக கழக நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.