
தென்காசி மார்ச் ; 08 –
தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் தென்காசி காந்தி சிலை முன்பு மத்திய அரசின் முன்மொழி கொள்கையை ஆதரித்து வீடு தோறும் ஆதரவு கையெழுத்து பெறும் நிகழ்ச்சி தென்காசி மாவட்ட தலைவர் ஆனந்தன் அய்யாசாமி தலைமையில் துவங்கி நடைபெற்றது.நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
சோழன் பழனிச்சாமி கலந்து கொண்டு பொதுமக்களிடம் மும்மொழி கொள்கைக்கான ஆதரவு மனுவில் கையெழுத்து பெற்று துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட மும்மொழி கையெழுத்து இயக்க பொறுப்பாளர் முத்துகுமார், பாலகுருநாதன், முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளர்கள் அருள்செல்வன், ராமநாதன் முன்னாள் மாவட்ட துணைத் தலைவர்கள் பால்ராஜ், முன்னாள் மாவட்ட செயலாளர் ஜானகி, தென்காசி நகர பொதுச்செயலாளர் யோகா சேகர், முன்னாள் நகர செயலாளர் நாராயணன்,
விஸ்வநாதன், முன்னாள் நகர பொருளாளர் நாகராஜன் முன்னாள் மாநில வர்த்தக பிரிவு செயலாளர் கோதை மாரியப்பன் , முன்னாள் தொழில் பிரிவு மாநிலச் செயலாளர் மகாதேவன் முன்னாள் அணி பிரிவு மாவட்ட தலைவர்கள் கருப்பசாமி செந்தூர் பாண்டியன்,வெங்கடேஷ் ,சுற்றுச்சூழல் பிரிவு தலைவர் ராஜ குலசேகர பாண்டியன், அரசு தொடர்பு பிரிவு குத்தாலிங்கம், இளைஞர் அணி மாவட்ட துணைத் தலைவர் விவேக் குமார், மாவட்ட பொதுச் செயலாளர் சங்கரநாராயணன், மகளிர் அணி மாவட்ட சமூக ஊடக பொறுப்பாளர் மரகதா , முன்னாள் உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட செயலாளர் ராஜ்குமார் ,தென்காசி நகர் மன்ற உறுப்பினர்கள் சங்கர சுப்பிரமணியன், லட்சுமணபெருமாள், சுனிதா ,மேலகரம் நகர்மன்ற உறுப்பினர் மகேஸ்வரன் முன்னாள் செங்கோட்டை நகர பொதுச்செயலாளர் கோமதிநாயகம் உள்ளிட்ட நிர்வாகிகள், பாஜக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.