
பாரதிய ஜனதா கட்சி சார்பில் தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு வரும் நிலையில் தேனி மாவட்டத்திலும் தற்பொழுது புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் இந்நிலையில் தேனி அல்லி நகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது தேனி மாவட்ட தலைவர் இராஜபாண்டியன் தலைமையிலும் தேனி நகர தலைவர் ரவிக்குமார் முன்னிலையிலும் நடைபெற்றது
சிறப்பு அழைப்பாளராக பெருங்கோட்ட பொறுப்பாளர் கதிலி நரசிங்க பெருமாள், பெருங்கோட்ட அமைப்பு செயலாளர் ராஜசேகர் ,மாநில செயற்குழு உறுப்பினர் பழனி ஆகியோர் பங்கேற்று பாரதிய ஜனதா கட்சி சார்பில் தற்பொழுது நடைபெற்று வரும் நிகழ்வுகள் குறித்தும், கட்சியின் வளர்ச்சி குறித்தும் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் எவ்வாறு வெற்றி வாகை சுட வேண்டும் என்றும் சிறப்பு உரையாற்றினார் மேலும் தேனி மாவட்ட தலைவர் இராஜபாண்டியன் பங்கேற்று தேனி மாவட்டத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்து சிறப்புரையாற்றினார் மேலும் இந்த நிகழ்வில் தேனி மாவட்டத்தை சேர்ந்த மாவட்ட ஒன்றிய மண்டல கிளை நிர்வாகிகள் என 500க்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் பங்கேற்றனர்