
தமிழகத்தில் ஆயிரம் கோடி டாஸ்மாக் ஊழல் என்றால் சிரித்து விடுவார்கள், 2ஜி ஊழலை மிஞ்சக்கூடிய ஊழல் இந்த டாஸ்மாக் ஊழல், 2 லட்சம் கோடிக்கு மேல் ஊழல் நடைபெற்று இருக்கும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பேட்டி
தேனியில் இந்து மக்கள் கட்சி தொண்டரணி சார்பில் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது இந்தக் கூட்டத்தில் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்து கொண்டு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அர்ஜுன் சம்பத் கூறும்போது
முல்லைப் பெரியாறு அணை உடைந்து விடும் என கம்யூனிஸ்ட் கட்சிகள் கேரளா மக்கள் மத்தியில் பீதியை கிளப்பி வருகின்றனர் இது தமிழகம் – கேரளா மக்கள் இடையே நல்லுறவை சிதைக்கின்றது
தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்வதை கம்யூனிஸ்ட் கட்சிகளின் வேலையாக இருக்கின்றது
தேனி மாவட்ட காவல்துறையினர் இந்து அமைப்பினர்களுக்கு தொடர்ந்து நெருக்கடிகளை கொடுத்து வருகிறது தேனியில் இஸ்லாமியர் பயிற்சி மையம் செயல்படுகிறது அதற்கு காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, தேனி மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள், நக்சலைட்டில் நடமாட்டம் இருக்கின்றது அது குறித்து போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை
தமிழக அரசு அறிவித்த பட்ஜெட் கடன்கார பட்ஜெட் 9 லட்சம் கோடி கடன் வாங்கிவிட்டு மேலும் ஒரு லட்சம் கோடி கடன் வாங்க வேண்டும் என நிதித்துறை செயலாளர் கூறுகிறார்
திமுக குடும்பத்தினர் நடத்தும் தொழில்கள் அனைத்தும் லாபத்தில் இயங்குகிறது ஆனால் திமுக அரசு நஷ்டத்தில் இயங்குகிறது
2ஜி ஊழலை மிஞ்சக்கூடிய ஊழல் இந்த டாஸ்மாக் ஊழல் 2 லட்சம் கோடிக்கு மேல் ஊழல் நடைபெற்று இருக்கும்
டாஸ்மாக்கிற்கு எதிரான நாளைய தினம் பாஜக நடத்துகிற போராட்டத்திற்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு தெரிவிக்கிறது
வருகிற 2026 தேர்தல் நடக்கும் போது திமுக ஆட்சி அதிகாரத்தில் இருந்தால் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவார்கள் அதனால் இந்த அரசை டிஸ்மிஸ் செய்துவிட்டு தேர்தல் நடத்த வேண்டும் என்று தெரிவித்தார்