
தமிழக முழுவதும் ப்ளூடூத் முறையில் ரேஷன் கடையில் பி ஓ எஸ் கருவியுடன் எடை தராசை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது அவ்வப்போது சிக்னல் கோளாறுகளும் முன்னுரிமை பெற்ற குடும்ப அட்டைதாரர்களுக்கு இரண்டு முறை ரேகை வைத்து பொருட்கள் கொடுப்பதே சவாலாக உள்ளது.
தற்போது செயல்படுத்தும் முறையினால் என் பி ஹெச் எச் கார்டுகளுக்கு ஐந்து முறையும் பிஎச்எச் கார்டுகளுக்கு எழு முறையும் கைரேகை பதிய வேண்டும் பல கடைகளில் எடையாளர் இல்லை ஒரே பணியாளர் இரண்டு வேலை செய்ய வேண்டும் இதனால் நேர விரையம் ஏற்படும் இந்நிலைத் தொடர்ந்தால் பணியாளர்கள் ஒருமுறை கைரேகை வைத்தாலே அனைத்து பொருட்களும் வழங்கப்படும் விதமாக செயல்படுத்த
வேண்டும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கடைகளிலிருந்து சரியான எடை அளவில் ரேஷன் கடைகளுக்கு அத்தியாவசிய பொருள்கள் நகர்வு செய்யப்படுவதே கிடையாது மூட்டை ஒன்னுக்கு அரிசி 50 கிலோ 650 கிராம் இருக்க வேண்டும் தாங்களே ஆய்வு செய்து இதனுடைய உண்மை தன்மையை அறிந்து கொள்ளலாம்
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கடைகளுக்கு சிந்துதல் சிதறுவதற்க்கு சேதாரக் கழிவு வழங்கப்படுகிறது கூட்டுறவு ரேஷன் கடைகளுக்கு சேதாரக் கழிவு வழங்கப்படுவதில்லை
முதன்மை சங்கங்கள் என்ற பெயரில் கூட்டுறவு சங்க பணியாளர்களே நகர்வு செய்யும் பணியை மேற்கொள்கின்றனர் அவர்களால் சரியான நிலையில் பொருள்களை நுகர்பொருள் வாணிய கழகத்தில் இருந்து பெற முடியவில்லை
முதன்மை சங்கங்களை நகர்வு செய்வதால் ரேஷன் கடைகளில் நாங்கள் எடையிட்டு எடை குறைவு ஏற்பட்டால் அது எங்களது பணியாளர்களை நாங்கள் குறை சொல்லும் நிலைக்கு தள்ளப்படுகிறோம் எனவே ரேஷன் கடைகளுக்கு நகர்வு செய்யப்படும் பொருட்களை உறுதியான கடும் வழிகாட்டு நெறிமுறைகளோடு வாரியில் எடை போட்டு ஏற்றி கூட்டுறவு ரேஷன் கடைகளுக்கு இறக்கக்கூடிய பொறுப்புகளை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தை சேர்ந்த பணியாளர்கள் மேற்கொள்ள வேண்டும் அவ்வாறு மேற்கொள்ளும் போது எடை குறைவு இருந்தால் நாங்கள் சுட்டிக் காட்ட வசதியாக இருக்கும்
எங்கோ தவறு நடைபெற்று ஆய்வு என்ற முறையில் இறுதியாக ரேஷன் கடை பணியாளர்கள் பாதிப்படைய கூடாது ரேஷன் கடைகளில் பி ஓ எஸ் கருவியுடன் எடை தராசை இணைக்கும் போது நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் இருந்து ரேஷன் கடைகளுக்கு சரியான எடையில் பொருட்கள் வருகிறதா என்பதை உயர் அதிகாரிகள் லாரியிலிருந்து பொருட்கள் பெறப்படும் போது எடையிட்டு எடை அளவை சரி பார்க்கச் வேண்டும் பிறகு கள அலுவலர்களால் எடை அளவு சரிபார்க்கப்பட்ட பின்னரே பி ஓ எஸ் கருவியில் உள்வரவு வைக்கப்பட வேண்டும் என அனைத்து ரேஷ்ன் கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது