
Oplus_131072
அரியலூர் மாவட்டத்தில் கள்ளச் சாராயம் மற்றும் போதைப் பொருள் பயன்பாடுகளால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வு பெறும் வகையில் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் அரியலூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் சார்பில் கள்ளச்சாரம் மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியினை மாவட்டஆட்சியர்பொ.இரத்தினசாமி, கொடியசைத்து துவக்கி வைத்தார்.விழிப்புணர்வு பேரணியில் அரியலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த சுமார் 250 மேற்பட்ட மாணாக்கர்கள் கலந்து கொண்டனர்.மேலும் பேரணியில் கலந்துகொண்ட மாணவ, மாணவிகள் “மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்கு கேடு, மது அருந்துதல் உடல் நலத்துக்கு கேடு, போதையில்லா தமிழகத்தை உருவாக்குவோம், பாதுகாப்பாக இருப்பீர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதீர், இளம் பருவத்திலேயே மது அருந்துவதை தவிர்த்தல்” போன்ற குடியினால் ஏற்படும் விளைவுகள் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.இந்நிகழ்ச்சியில்,உதவி ஆணையர் (கலால்) சிவா, வட்டாட்சியர் (அரியலூர் கோட்ட கலால்) தேவகி, வட்டாட்சியர் (உடையார் பாளையம் கோட்ட கலால்) திருமாறன், அரியலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன், விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, அரசு அலுவலர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.