
சேலம் மத்திய மாவட்ட மெய்யனூர் பகுதி திமுக கழகம் சார்பில் திருவாக் கவுண்டனூர் மாரியம்மன் கோவில் திடல் முன்பு தமிழ்நாடு முதலமைச்சர் 72 ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மெய்யனூர் பகுதி கழகச் செயலாளர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். 23வது கோட்டச் செயலாளர் அன்பழகன் வரவேற்புரை ஆற்றினார். மாநகரச் செயலாளர் ரகுபதி, ராஜேந்திரன், மாரியப்பன்,பொதுக்குழு உறுப்பினர் சத்யாகுமார், 23வது கோட்ட கவுன்சிலர் சிவகாமி,மெய்யனூர் பகுதி துணைச் செயலாளர் குமார், 23வது வார்டு துணைச் செயலாளர் அறிவழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை கழக பேச்சாளர்கள் மண்ணை இளங்கோவன்,ராஜேஸ்வரி மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மூத்த முன்னோடிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.