
வேலூர் மாவட்டம் ,வேலூர் கிருஷ்ணா நகர் சாரதாம்பாள் சீனிவாச முதலியார் திருமண மஹாலில் இலட்சியம் டிரஸ்ட் சார்பில் 11 ஆம் ஆண்டு விழாவும் மகளிர் தின விழாவும் கொண்டாடப்பட்டது .ஒன் மைண்ட் வேலூர் வி. சுரேஷ் போஸ் வரவேற்புரையாற்றினார்.இதில் சிறப்பு அழைப்பாளர் விஐடி பல்கலைக்கழகம் துணைவேந்தர் ஜி.வி .செல்வம், விழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி துவக்கி வைத்து பெண்கள் தின விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். உடன் கௌரவ விருந்தினர்கள் அதிமுக வேலூர் மாநகர மாவட்ட செயலாளர் எஸ் ஆர் கே அப்பு , ரோட்டரி. முன்னாள் மாவட்ட கவர்னர் ஆடிட்டர் பாண்டியன், 2025-2026 ரோட்டரி மாவட்ட கவர்னர் வி சுரேஷ் , வேலூர் சங்கரன் பாளையம் ,கிளை வங்கி மேலாளர்கள் வண்டரந்தாங்கல் ஊராட்சி மன்ற தலைவர் ராகேஷ் மற்றும் இலட்சியம் டிரஸ்ட் நிறுவனர் வி.உமா மகேஸ்வரி உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர் மகளிர் தின விழாவில் திரளானோர் கலந்து கொண்டனர்.