
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் பிளவு உதடு மற்றும் / அல்லது அண்ணப்பிளவுடன் 35,000 குழந்தைகள் பிறப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. இதற்கு சிகிச்சையளிக்கப்படாத பல்லாயிரம் குழந்தைகள் உணவுண்ணல், சுவாசித்தல், செவித்திறன் கேட்பு மற்றும் பேச்சுத்திறன் ஆகியவற்றின் சிரமங்களை கொண்டிருக்கின்றன. தனிமைப்பட்டு வாழ்கிற சூழல் இருக்கிறது. பிளவு உதடு / அண்ணப்பிளவு சிகிச்சை மீது சிறப்பு கவனம் செலுத்தி வரும் உலகின் மிகப்பெரிய அமைப்பான ஸ்மைல் டிரெயின், தமிழ்நாடு மாநிலத்தில் இத்தகைய மரபுவழி குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தைகளை அடையாளம் காணவும், உரிய நேரத்தில் சிகிச்சையளிக்கவும் ராஷ்ட்ரிய பால் ஸ்வஸ்திய காரியக்ரம் (RBSK) செயல்திட்டத்தின் கீழ், தேசிய சுகாதார திட்டம், தமிழ்நாடு அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலவாழ்வுத்துறையுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MOU) கையொப்பமிட்டிருக்கிறது.ஸ்மைல் டிரெயின் அமைப்பின் முதுநிலை துணை தலைவரும் மற்றும் ஆசியாவிற்கான பிராந்திய இயக்குநருமான மம்தா கேரல் இக்கூட்டாண்மை குறித்து கூறுவது கடந்த“25 ஆண்டுகளாக பிளவு உதடு/அண்ணப்பிளவு பாதிப்புகளுக்கு இலவச சிகிச்சையினை வழங்கியிருப்பதோடு மாநில சுகாதாரத் துறைகளோடு கூட்டாண்மைகள் மற்றும் பயிற்சியளிப்பின் வழியாக உள்ளூர் அளவில் சுகாதாரப் பராமரிப்பு அமைப்புகளை ஸ்மைல் டிரெயின் இந்தியா வலுப்படுத்தி வந்திருக்கிறது. இந்தியாவெங்கிலும் 750,000-க்கும் அதிகமான அறுவைசிகிச்சைகளுக்கு நாங்கள் ஆதரவளிக்கின்றோம். 2006-ம் ஆண்டிற்கு பிறகு தமிழ்நாட்டில் மட்டும் ஏறக்குறைய 40,000 அறுவைசிகிச்சைகள் எங்களது ஆதரவோடு செய்யப்பட்டிருப்பது, இதில் உள்ளடங்கும். RBSK உடன் இந்த ஒத்துழைப்பு, மாநிலம் முழுவதிலும் உதடு/அண்ணப்பிளவுக்கான சிகிச்சை சேவைகளை மேம்படுத்துவதில் ஒரு முக்கிய முன்னேற்றம் நிகழ்வை குறிக்கிறது; இந்த சிகிச்சையை தேவையிருக்கும் ஒவ்வொரு குழந்தையும் உரிய நேரத்திற்குள் உயர்தரமான சிகிச்சையை இலவசமாக பெறுவதை இந்த ஒத்துழைப்பு உறுதி செய்யும்”. தமிழ்நாடு தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குநர் டாக்டர். A. அருண் தம்புராஜ் ஐ.ஏ.எஸ்., இதுகுறித்து பேசுகையில்,”ஆரம்ப நிலையிலேயே கண்டறிதல் மற்றும் பரிந்துரைப்பு அமைப்பு முறைகளை மேம்படுத்துவதன் வழியாக உதடு/அண்ணப்பிளவுக்கான சிகிச்சை தேவைப்படும் குழந்தைகள், அதற்கான உயர்தர சிகிச்சையை முற்றிலும் கட்டணமின்றி இலவசமாக பெறுவதை இக்கூட்டாண்மை உறுதி செய்யும்.