
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 97வது பிறந்தநாள், அகில இந்திய சிவாஜி மன்ற தலைவர் ஜி.ராம்குமார் 70வது பிறந்த நாள், திரையுலக கலை பயணத்தில் இளைய திலகம் பிரபுவின் 43வது ஆண்டு வெற்றி விழா,
சேலம் அம்மாபேட்டை செங்குந்த முதலியார் திருமண மண்டபத்தில் முப்பெரும் விழாவாக சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஆயிரக்கணக்கான சிவாஜி, பிரபு, விக்ரம் பிரபு, ரசிகர்கள் படை சூழ அம்மாபேட்டை காந்தி, காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இந்தியா முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டனர் அனைவருக்கும் அறுசுவையான உணவு, பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. 50க்கும் மேற்பட்ட பேனர்கள், சிவாஜிக்கு 30 அடி கட் அவுட் வைக்கப்பட்டு மல்லிகை மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. மாலையில் சிவாஜி பிரபு பாடல்கள் மட்டும் பாடிய இசை நிகழ்ச்சி நடந்தது. சிவாஜி வேடமிட்டு 30க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு நடனம் ஆடினர். விழாவிற்கான மொத்த ஏற்பாட்டினையும் சேலம் மாவட்ட சிவாஜி மன்றம் வழங்கும், கும்பகோணம் சிவாஜி சேகர் முழு ஏற்பாட்டில் நடைபெற்றது .முப்பெரும் விழா, கும்பகோணம் சிவாஜி சேகர் சேலத்தில் தங்கி இருந்து மேற்கொண்டார். விழாவில் பலருக்கு கல்வி உதவி, தொழில் தொடங்க தனது சொந்த செலவில் உதவி செய்தார். அவரது இந்த சீரிய பணியை விழாவில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான சிவாஜி ரசிகர்கள் நெகிழ்ந்து சிவாஜி சேகரை பாராட்டினார்கள்.