
பிளாஸ்டிக் பிராசஸிங் தொழில்துறைக்கான புதுமையான தீர்வுகள் வழங்குவதில் உலகளாவிய முன்னணி நிறுவனமான மோட்டான் குழுமம், இந்தியாவில் சென்னை மாநகரில் தனது அதிநவீன தொழிலகம் தொடங்கப்பட்டிருப்பதை பெருமையுடன் அறிவிக்கிறது. இந்த மூலோபாய விரிவாக்க நடவடிக்கை, இந்திய பிளாஸ்டிக் துறையின் அதிகரித்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் குறிக்கோள் மீது மோட்டான் குழுமத்தின் அர்ப்பணிப்பை வலுவாக எடுத்துரைக்கிறது. மோட்டான் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி. ஃபுல்சாக் சாண்ட்ரா, நிறுவனத்தின் உலகளாவிய தொலைநோக்குப் பார்வையை வலியுறுத்தி கூறியதாவது: “1947 ஆம் ஆண்டில் கான்ஸ்டன்ஸ் ஏரியின் கரையில் நிறுவப்பட்ட மோட்டான் நிறுவனம், உலகளவில் 80-க்கும் மேற்பட்ட நாடுகளில் பிரதிநிதித்துவத்துடன் பிளாஸ்டிக் தொழில்துறையில் செயல்முறை துணை சாதனங்களுக்கான முன்னணி பங்களிப்பாளராக மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டிருக்கிறது.மோட்டான் குழுமத்தின் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி திரு. கார்ல் லிதர்லேண்ட், இந்திய சந்தையின் முக்கியத்துவத்தை குறிப்பிட்டு பேசுகையில், “இந்தியா எங்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க சந்தையாக இருக்கிறது. நீண்ட காலமாகவே இந்திய கூட்டாளிகளுடன் நாங்கள் ஒத்துழைப்பை மேற்கொண்டு செயல்பட்டு வருகிறோம். இந்த தொழிலகம் தொடங்கப்பட்டிருப்பது, இந்தியாவில் எங்கள் செயலிருப்பை வலுப்படுத்துவதில் ஒரு முக்கியமான, வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தை குறிக்கிறது” என்று குறிப்பிட்டார்.