
ஆர்.கே. பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகில் தண்ணீர் பந்தலை முன்னாள் அரசு தலைமை கொறடாவும் முன்னாள் திருத்தணி சட்டமன்ற உறுப்பினருமானபி. எம். நரசிம்மன் திறந்து வைத்தார். கோடைக்காலத்தை முன்னிட்டு பொது மக்களுக்கு தாகம் தணிக்கும் வகையில் இளநீர்,தர்பூசணி,வெள்ளரிப்பிஞ்சு ,சாத்துக்குடி,வாழைப்பழம், மோர், கிர்ணி பழம்,ஐஸ்கிரீம் மற்றும் தயிர்சாதம், எலுமிச்சை சாதம் உள்ளிட்ட 10 வகையான உணவுப் பொருட்களை பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஜி. பார்த்தீபன் . வழக்கறிஞர் இ. எம். எஸ். நடராஜன்மற்றும் எல்லாபுரம் எல். ரஜினி முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் கழக பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்..