
செங்கல்பட்டு மாவட்டம், பழவேலி கிராமம், சிவன் கோவிலின் அருகில் பிறந்து சிலநாட்களே ஆன பையில் இருந்த ஒரு பெண் குழந்தையை காவல் அலுவலர்கள் மூலம் 11.01.2025 அன்று மீட்கப்பட்டு குழந்தைகள் உதவி மையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு 108 மருத்துவ அவசர உதவி வாகனம் மூலம் செங்கல்பட்டு அரசுமருத்துவகல்லூரி மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை பிரிவில் சேர்ப்பிக்கப்பட்டு உரிய மருத்துவ உதவிகள் அளிக்கப்பட்டு, செங்கல்பட்டு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலிருந்தது மாவட்ட குழந்தைகள் உதவிமைய பணியாளர்கள் மூலம் செங்கல்பட்டு குழந்தைகள் நலக்குழுவில் குழந்தையை பாதுகாப்பான முறையில் முன்னிலைப்படுத்தி குழந்தைகள் நலகுழுவின் ஆணையின் பேரில், குழந்தைகள் பராமரிப்பு இல்லத்தில் தங்கவைக்கப்பட்டு குழந்தைக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு அளிக்கப்பட்டு வருகிறது..எனவே, இந்த பெண்குழந்தையை குறித்து உரிமைகோர விரும்புவோர் செய்திதாளில் அறிவிப்பு வெளிவந்த நாளிலிருந்து 30 நாட்களுக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு தக்கசான்றிதழ்களுடன் தொடர்பு கொண்டு குழந்தையை பெற்றுக்கொள்ளலாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
1. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,அறை எண். F0-06, தரைதளம்,
F-Block, புதிய மாவட்ட ஆட்சியரக வளாகம்,
செங்கல்பட்டு 603 111,
தொலைபேசி எண், 6382613182.
2. குழந்தைகள் நலக்குழு
அரசினர் சிறப்பு இல்ல வளாகம்,
ஜீ.எஸ்.டிரோடு,
செங்கல்பட்டு மாவட்டம் – 603 002,
கைப்பேசிஎண் 9840676135.