
வக்ஃபு திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதை கண்டித்தும் , அதை திரும்பப் பெறக் கோரியும் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தென்மேற்கு மாவட்டச் செயலர் ஏ.வடிவேல் தலைமை வகித்தார்.மாவட்டத் துணைச் செயலர்கள் இ.ரமேஷ் (எ) சக்திவேல், டி. காமராஜ், கார்த்தி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பி.ஏ. பிரித்திவிராஜ் முன்னிலை வகித்தனர்.மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் குமரேசன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் மனோரஞ்சிதம், மாவட்ட உறுப்பினர் சேர்க்கை அணி அமைப்பாளர் மணி நகரச் செயலர் சிவக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று , மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் சேகர் மணிராஜன் பாரதி முத்து ஜான் பீட்டர் மற்றும் மாவட்ட நகர ஒன்றிய கிளை நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.