
தமிழ்நாடு முழுவதும் அஇஅதிமுக அம்மா பேரவை சார்பில் வெள்ளிக்கிழமை தோறும் ஓவ்வொரு ஒன்றிய, நகர, பேரூர் பகுதிகளில் கடந்த அதிமுக அரசின் சாதனைகளையும் தற்போதைய திமுக அரசின் சோதனைகளையும் விளக்ககூடிய துண்டு பிரசுரங்கள் திண்ணை பிரச்சாரத்தில் வழங்கப்பட்டது தென்காசி வடக்கு மாவட்டம் குருவிகுளம் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட புது சுப்புலாபுரத்தில் மாவட்ட அம்மா பேரவை சார்பில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ராமசாமி (எ) ரவி தலைமையிலும், குருவிகுளம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் அ.இரவிச்சந்திரன் முன்னிலையிலும் கழக ஆட்சியின் சாதனை குறித்த திண்ணை பிரச்சாரம் மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் மாவட்ட மருத்துவ அணி செயலாளர் டாக்டர் திலீபன் ஜெய்சங்கர், குருவிகுளம் முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் ராமசாமி, மாவட்ட சிறுபான்மையினர் நலப்பிரிவு துணைத் தலைவர் அமல்ராஜ், மாவட்ட கலை பிரிவு துணைத் தலைவர் இராமசுப்பு, மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் செல்வராஜ், ஒன்றிய மகளிர் அணி செயலாளர் விஜயராணி திருநாவுக்கரசு, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை தலைவர் பாலமுருகன், முன்னாள் ஊராட்சி கழக செயலாளர் முத்தையா, கிளைக் கழகச் செயலாளர் பாலசுப்பிரமணியன், கிளை கழக செயலாளர் சங்கர் ராஜ், பழங்கோட்டை சாமி, ஜி.ஜி டெக்ஸ் உரிமையாளர் குருசாமி, கடை சுப்பிரமணியன், கார்த்திகேயன் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.