
திருவெண்ணெய்நல்லூர் கடைவீதியில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு ரூ.85 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்ததற்கு நகர செயலாளர் பூக்கடை கணேசன் தலைமையில் பட்டாசு வெடித்துக் கொண்டாடப்பட்டது. தமிழக சட்டமன்றத்தில் நேற்று நடைபெற்ற வேளாண்மை துறை மானிய கோரிக்கையில் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு சுற்றுச் சுவர் மற்றும் தரை தளம் அமைப்பதற்கு ரூ.85 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இதற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், வனத்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோருக்கு நன்றி தெரிவித்து திருவெண்ணெய்நல்லூர் கடைவீதியில் நகர திமுக சார்பில் நகர செயலாளர் செயலாளர் பூக்கடை கணேசன் தலைமையில் பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது. அப்போது கடை வீதியில் உள்ள வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.. இதில் துணைத் தலைவர் ஜோதி, பொருளாளர் சையத் நாசர், வழக்கறிஞர் சுரேஷ்பாபு, டி.எஸ்.முருகன்(சி.பி.ஐ), ராஜாராமன், கவுன்சிலர்கள் செல்வம், பாக்யராஜ், ஜோதி, அறிவழகன், வார்டு செயலாளர்கள் வெற்றிவேல் செழியன், சுரேஷ், சிறுவா.மணி மற்றும் சுலைமான், டி.எடையார் குணா, உள்ளிட்ட திமுக நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.