
oppo_16
தென்காசி மாவட்டம், சுரண்டை சிவகுருநாதபுரம் இந்து நாடார் உறவின்முறை மகமை கமிட்டி ட்ரஸ்டுக்கு பாத்தியப்பட்ட முப்பிடாறி அம்மன் கோவில் பங்குனி திருவிழா கடந்த 1ம் தேதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று மாலை 6 மணிக்கு முப்பிடாதி அம்மன் பஜனை குழுவினரின் சார்பில் ஆயிரத்து 8 திருவிளக்கு பூஜை நடந்தது. இரண்டாம் நாள் புதன்கிழமை மாலை 6 மணிக்கு சிறப்பு பூஜை தொடர்ந்து ஆன்மீக சொற்பொழிவு நடந்தது.3ம் நாள் ஆன்மீக உரை, 4ம் நாள் நவீன வில்லிசை, 5ம் நாளான நேற்று இன்னிசை கச்சேரி நடந்தது. 6ம் நாள் ஞாயிற்றுக்கிழமை பல் சுவை நிகழ்ச்சி, நடந்தது. 7ம் நாள் திங்கள் கிழமை இரவு 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜை, இரவு 1 மணிக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் முப்பிடாதி அம்மன் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து காமராஜர் சிலம்பாட்ட குழுவினரின் சிலம்பாட்ட சாகச நிகழ்ச்சி நடந்தது. 8ம் நாள் செவ்வாய்க்கிழமை மாலை 7 மணிக்கு கலை நிகழ்ச்சி, இரவு 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், அதிகாலை 3 மணிக்கு அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. 9ம் நாள் இன்று புதன்கிழமை சிகர நிகழ்ச்சியான தேர்த்திருவிழா நடக்கிறது. மாலை 3 மணிக்கு தேர் ரதத்தில் முப்பிடாதி அம்மன் எழுந்தருளி ரத வீதிகளில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து நடன நாட்டிய கலை நிகழ்ச்சி நடக்கிறது. 10ம் நாள் நாளை வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி சிவகுருநாதபுரம் சிவகாமி அம்பாள் சமேத சிவகுருநாதர் கோவிலுக்கு சென்று அங்கு அம்மன் ஊஞ்சல் காட்சி மற்றும் சிறப்பு பூஜை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை சுரண்டை சிவகுருநாதபுரம் இந்து நாடார் உறவின்முறை மகமை கமிட்டியினர் செய்துள்ளனர்.