
தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட மசோதாவிற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் வழங்க உத்தரவிட கோரி தமிழக ஆளுநர் ஆர். என். ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியின் செயல்பாடுகள் நேர்மையாக இல்லை என்றும், தமிழக ஆளுநர் செயல்பாடு அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் அதிரடி தீர்ப்பு வழங்கியது.
மேலும்தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருக்க வேண்டும் என்றும்உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் இந்தவரலாற்று சிறப்பு வாய்ந்த தீர்ப்பை வரவேற்று விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் செஞ்சியில் செஞ்சி ஒன்றிய பெருந்தலைவர் விஜயகுமார், செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலிமஸ்தான்ஆகியோர் தலைமையில் திமுகவினர் பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
இதில் பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன்,நகரசெயலாளர் கார்த்திக், பொருளாளர் நெடுஞ்செழியன்,துணைச் செயலாளர் செயல் மணி,அரசு வழக்கறிஞர் தமிழ்ச்செல்வி கர்ணன்,பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள்ஜான் பாஷா,சீனிவாசன், பொன்னம்பலம்,நூர்ஜகான் ஜாபர்,நிர்வாகிகள் ஜெ.எஸ்.சர்தார்,தொண்டர்அணி பாஷா, சிங்கம் சேகர், பாலகிருஷ்ணன், வாசு, செந்தில், வழக்கறிஞர்கள் அன்பு செல்வன், சந்திரன், பாபு, பாலா,தண்டபாணி ,ராம் குமார், மொபின் ,பிலால்,தொமுச தியாகராஜன்,ஜம்போதி பழனி உள்ளிட்டோர்கலந்து கொண்டனர்