
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தாலுக்கா ஜாபரபாத் புதுத்தெருவில் கதவு எண் 3/22 மொஹீதீன் சாயபு மனைவி கமாலுன்னிசா என்பவருக்கு சொந்தமான ஜாப்ரபாத் கிராமத்தில் சர்வே எண்: 15 என்னில் 1125 சதுர அடி மற்றும் 2/1எ 1380 சதுர அடி கிராம நத்தம் பட்டா 139 -ன் படி சர்வே எண் 15/6 க்கு 1216 ஆக மொத்தம் 3741 சதுர அடி வாணியம்பாடி தாலுக்கா ஜாப்ராபாத் கிராமத்தில் பி சி ஜே நகர் வசிக்கும் அமின் பாஷா மகன் அக்பர் பாஷா மற்றும் பட்டாப்பேட்டை கிராமத்தில் வசிக்கும் சிவன் மகன் மாதேஸ்வரன் ஆகிய இருவரும் ஒரு சதுர அடிக்கு ரூபாய் 2000 என கிரையம் பேசி மேற்படி இடத்தின் உரிமையாள் மற்றும் அவருடைய வாரிசுதாரர்கள் ஹபீபுர், ரஹ்மான், ஷகிலா, சையத் இப்ராஹிம், நஜீர் அகமத், பஹீர் , அஹ்மத், ஷாகீரா பேகம், ஹஜீர், மும்தாஜ் பேகம், முஹம்மத் ஹனீப் மேற்படி ஆகிய நபர்கள் அனைவரும் ஏகோபித்து முழு மன சம்மதத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17ஆம் தேதி அக்ரிமெண்ட் பத்திரம் செய்தவுடன் இதில் முன்பணமாக மேற்படி 3741 சதுர அடிக்கு ரூபாய் 10 லட்சம் பெற்றுக் கொண்டுள்ளனர்.
இடத்தை வாங்கும் நபர்கள் இருவரும் சுமார் பத்துக்கும் மேற்பட்ட அடியாட்களை வைத்துக் கொண்டு சம்பந்தப்பட்ட இடத்தில் 09.04.2025 அன்று மாலை சுமார் 6 மணியளவில் ஜேசிபி எந்திரம் மூலம் தடுப்பு சுவர் மற்றும் இரும்பு கேட்டை இடித்துவிட்டு காலி இடத்தில் தென்னங்கீற்றால் குடிசை அமைத்துள்ளார். இத்தகவலை அறிந்த இடத்தின் உரிமையாளர் சம்பந்தப்பட்ட நபரிடம் ஏன் இது போன்ற செயல் ஈடுபடுகின்றனர். என்று கேட்டதற்கு அவர்களை தகாத வார்த்தைகளும் உங்களால் என்ன செய்ய முடியுமோ செய்து கொள்ளுங்கள் பணத்தை கட்ட முடியாது இடம் எங்களுக்கு தான் சொந்தம்! என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் காவல் துறை உதவி எண் 100க்கு தொடர்பு கொண்டு சம்பவம் குறித்து தகவல் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக வாணியம்பாடி நகர காவல் துறையினர் சம்பந்தப்பட்டத்தில் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறிய காவல்துறையினர் இதுவரை சம்பந்தப்பட்ட நபர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் மீண்டும் 10.04.2025 இன்று காலை 10 மணியளவில் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர்.
மேற்படி சர்வே எண்ணில் உள்ள 3741 சதுர அடி கொண்ட இடம் தங்கள் பெயரில் உள்ளதால் எவ்வாறு முன்பணம் மட்டும் கட்டிய நபர்களுக்கு எப்படி சொந்தமாகும் மீதமுள்ள பணத்தை செலுத்தினால் நாங்கள் கிரையும் கொடுத்து விடுகிறோம் ஆனால் பணத்தை தராமல் எங்களை மிரட்டி கிரயம் பெற முயற்சி செய்கின்றனர். மேலும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீதும் உடன் வந்த அடியாட்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை வைத்துள்ளனர்.