
குளிர் மற்றும் இலேசான வெயில் என சீரான தட்ப வெப்பநிலையை கொண்ட ஓசூர் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாகவே கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்த ஆண்டும் ஓசூர் பகுதியில் பிப்ரவரி மாதத்திலே கடுமையான வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது.
சுட்டெரிக்கும் கடுமையான வெயிலை சமாளிக்க பொதுமக்களுக்கு பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் தண்ணீர் பந்தல்கள் திறக்கப்பட்டு நீர் மோர் பானங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஓசூர் பகுதியில் திமுக சார்பிலும் பல்வேறு இடங்களில் தண்ணீர் பந்தல்கள் திறக்கப்பட்டுள்ளன. ஓசூர் மாநகராட்சி துணை மேயர் ஆனந்தய்யா ஏற்பாட்டில் ஓசூர் பாகலூர் சாலையில் இன்று தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. ஓசூர் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ், மேயர் சத்யா ஆகியோர் தண்ணீர் பந்தலை திறந்து வைத்தனர்.
இந்த தண்ணீர் பந்தலில் பொதுமக்களுக்கு தாகம் தணிக்கும் வகையில் பல்வேறு குடங்களில் வைக்கப்பட்டன அதேபோல அதன் அருகில் அந்த வழியாக சென்ற பொது மக்களுக்கு தட்டு நிறைய பழங்களை திமுகவினர் அள்ளிக் கொடுக்கனர். கடும் வெயிலை சமாளிக்க தர்பூசணி, இளநீர், பப்பாளி, நுங்கு, வெள்ளரி, வாழைப்பழம், சப்போட்டா, திராட்சை, அன்னாச்சி பழம் உள்ளிட்ட 11 வகையான பழங்கள் மக்களுக்கு வழங்கப்பட்டன. இதனை அனைவரும் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.
இந்த நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர் என். எஸ் மாதேஸ்வரன், தொமுச செயலாளர் கோபாலகிருஷ்ணன், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.