பாதுகாப்புமிக்க சொகுசு பயணத்திற்கான அதிநவீன வசதி, புதிய தொழில்நுட்பம் மற்றும்
மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சத்துடன் புதிய அர்பன் க்ரூசர் ஹைரைடர் காரை டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
ஓட்டுனர் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் வாடிக்கையாளர்களின் தேவைகளை அறிந்து அவர்கள் விரும்பும் வண்ணம் தனது கார்களில் பல்வேறு சிறப்பு அம்சங்களை டொயோட்டா நிறுவனம் வழங்கிவருகிறது.இந்தியாவின் முதல் செல்ப் சார்ஜிங் ஸ்ட்ராங் ஹைப்ரிட் எலக்ட்ரிக் காரான அர்பன் க்ரூசர் ஹைரைடர்
விற்பனையானது ஏற்கனவே 1 லட்சத்தை கடந்து சாதனை படைத்துள்ளது. அதன் புதுமையானதொழில்நுட்பம், எரிபொருள் சிக்கனம், ஆற்றல்மிக்க செயல்திறன் மற்றும் சிறந்த ஓட்டுநர் அனுபவம்ஆகியவற்றால் இது தொடர்ந்து அனைவரிடமும் மிகுந்த வரவேற்பை பெற்ற காராக இருந்து வருகிறது.இந்நிலையில் பல்வேறு கூடுதல் அம்சங்களுடன் இந்த காரை டோயோட்டா அறிமுகம் செய்துள்ளது.
பாதுகாப்பைப் பொறுத்தவரை, மேம்பட்ட பாதுகாப்பிற்காக பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும்வகையில் இதில் 6 ஏர்பேக்குகள் உள்ளது. கூடுதல் வசதி மற்றும் பாதுகாப்பிற்காக ஆட்டோ கியரில் சில
மாடல்களில் எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது.
செயல்திறனைப் பொறுத்தவரை, முந்தைய 5 ஸ்பீடு மேனுவல் கியருக்கு பதிலாக தற்போது புதிய 6ஸ்பீடு ஆட்டோ கியரைக் கொண்டுள்ளது.
வசதியைப் பொறுத்தவரை, ஓட்டுபவர்களுக்கு சிறப்பான வசதியை வழங்கும் வகையில் 8 வழிகளில்இருக்கையை சரி செய்யும் வசதி உள்ளது. பயணிகளின் வசதிக்காக உயர் ரக மாடல் கார்களின் பின்புறகதவுகளில் சன்ஷேட் பொருத்தப்பட்டு உள்ளது. இதன் பல்வேறு மாடல்களில் டயரில் உள்ள காற்றின்அளவு குறித்து அறிந்து கொள்ள டயர் அழுத்த கண்காணிப்பு தொழில்நுட்பம் உள்ளது. காரின்
உட்புறத்தில் ரம்மியமான அனுபவத்தை வழங்கும் வகையில் உயர் ரக மாடல்களில் இருக்கையை சுற்றிவிளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன. ஓட்டுபவர் மற்றும் அவர் அருகே அமர்பவருக்கு காற்றோட்டவசதி கொண்ட இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட சாதன இணைப்பிற்காக டைப்-சி யூ.எஸ்.பி பாஸ்ட்-சார்ஜிங் போர்ட்கள் உள்ளன. எல்இடி ஸ்பாட் மற்றும் ரீடிங் விளக்குகள் அனைத்து
மாடல்களிலும் உள்ளன. இது காரின் உட்புற வெளிச்சத்தை மேம்படுத்துகிறது. சில மாடல் கார்களின்உட்புறத்தில் காற்றின் தரத்தை கண்காணிக்க காற்று தர குறியீட்டு வசதி இடம் பெற்றுள்ளது.தெளிவான தகவல் காட்சியுடன் கூடிய ஸ்பீடோமீட்டர், அத்துடன் வெளிப்புறத்தில் அனைவரையும்கவரும் விதமாக இருவித வண்ணங்கள் பல்வேறு சிறப்புகளைக் கொண்டுள்ளது.புதிய அர்பன் க்ரூசர் ஹைரடர் குறித்து பயன்படுத்தப்பட்ட கார்கள் விற்பனை, சேவைப் பிரிவு துணைத்
தலைவர் வரீந்தர் வாத்வா கூறுகையில், இந்தியாவில் எஸ்யூவி கார்கள் தேவை அதிகரித்து வரும்நிலையில், எங்கள் கார்களை நாங்கள் தொடர்ந்து மேம்படுத்தி அறிமுகம் செய்து வருகிறோம். அதற்குசான்றாக எங்களின் புதிய அர்பன் க்ரூசர் ஹைரடர் உள்ளது. இந்த பிரிவில் சிறந்த தொழில்நுட்பம்,மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் சிறந்த வசதிக்கான எங்கள் அர்ப்பணிப்புக்கு இது ஒரு சான்றாகும். நவீன
எஸ்யூவி கார்களை வாங்குபவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த கார், எங்களின் புகழ்பெற்ற தரம்,நிலைத்தன்மை மற்றும் ஓட்டுநர் அனுபவத்தை தடையின்றி வழங்கும் என்பதில் எந்தவித சந்தேகமும்இல்லை.இந்த மேம்படுத்தப்பட்ட சிறப்பு அம்சங்கள் கூடுதல் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் என்று நாங்கள்
நம்புகிறோம், இது இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி கார்களில் ஒன்றாக அதன் நிலையைமேலும் உறுதிப்படுத்துகிறது. இன்றைய வாடிக்கையாளர்களின் மாறி வரும் தேவைகளுக்கு ஏற்பஎதிர்காலத்திற்கு ஏற்ற ஓட்டுநர் அனுபவத்தை இந்த கார் வழங்கும் என்று தெரிவித்தார்.கடந்த 2021-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட அர்பன் க்ரூசர் ஹைரைடர், கம்பீரமான தோற்றம்,மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் வெளி வந்தது. செல்ப் சார்ஜிங் ஸ்ட்ராங் ஹைப்ரிட் எலக்ட்ரிக்
பவர்டிரெய்னை கொண்டுள்ள இது நியோ டிரைவ் உடன் 1.5 லிட்டர் கே-சீரிஸ் என்ஜின், 5-ஸ்பீடுமேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனைக் கொண்டுள்ளது.
