
திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் சார்பில் இலக்கிய செல்வர் குமரி அனந்தன் நினைவஞ்சலி நிகழ்வில் இலக்கியச் செல்வர் குமரி அனந்தனின் பயணங்கள் நூல் வழங்கும் விழா திருச்சி தமிழ் சங்கத்தில் நடைபெற்றது. திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்க செயலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் வரவேற்றார். சிறப்பு தலைவர் அரிமா சௌமியா ராஜரத்தினம் தலைமை வகித்தார். திருச்சிராப்பள்ளி எழுத்தாளர் சங்க தலைவர் இந்திரஜித் முன்னிலையில் பொதுச்செயலாளர் ஜவகர் ஆறுமுகம் எழுதிய இலக்கியச் செல்வர் குமரிஅனந்தனின் பயணங்கள் நூலினை வழங்கினார்.
இலக்கியச் செல்வர் குமரி அனந்தனின் பயணங்கள் நூலில் தமிழ் காவியமாய் குமரி அனந்தன், பாராளுமன்றத்தில் குமரிஅனந்தன், காந்தியடிகளின் காலடி தேடி, குமரி அனந்தனின் பல்வேறு புனைப்பெயர்கள், இலக்கியச் செல்வரின் படைப்புகள், குமரி அனந்தன் பெற்ற விருதுகள் பட்டங்கள், சட்டமன்ற பாராளுமன்ற தொகுதிகளில் ஆற்றிய பணிகள், பெருந்தலைவருடன் இலக்கியச் செல்வர், குமரி அனந்தன் உண்ணாவிரதத்தில் முதலமைச்சர் எம்ஜிஆர், ரத்தினவேலு தேவர் இல்லத்தில் குமரி அனந்தன், தனி அடையாளம் என பல்வேறு தலைப்புகளில் குமரி அனந்தன் குறித்து நூலில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
சங்க பொருளாளர் சங்கரி சந்தானம், ஆட்சி மன்ற குழு உறுப்பினர் முகமது சபி, எழுத்தாளர் தனலட்சுமி பாஸ்கரன், பேராசிரியர் நெடுஞ்செழியன், துணைத் தலைவர் பத்மஸ்ரீ சுப்புராமன், ஆட்சி மன்ற குழு உறுப்பினர் கோவிந்தசாமி, திருச்சி நகைச்சுவை மன்றம் சிவகுருநாதன், திருச்சிராப்பள்ளி தமிழ் சங்க அமைச்சர் உதயகுமார், திருக்குறள் முருகானந்தம், மூளை நரம்பியல் மருத்துவர் எம்ஏ அலீம், இந்திய கலாச்சார நட்புறவு கழகம் பாலசுப்பிரமணியன், கே எஸ் சுப்பையா வட்டார கல்வி அலுவலர் ஜெயலட்சுமி கவி செல்வா முனைவர் பெஞ்சமின் இளங்கோ, கவிஞர் முனைவர்ஸ்ரீராம், ஆங்கரை பைரவி கலியமூர்த்தி, குழந்தை ஈகைவரசன், சுமித்ரா தேவி உட்பட பலர் நூலினை பெற்றுக் கொண்டனர். நிறைவாக துணைத்தலைவர் சூர்யா சுப்பிரமணியன் நன்றி கூறினார்.