
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சொத்து தகராறில் தம்பியை அடித்து கொலை செய்த அக்காவை செஞ்சி போலீசார் கைது செய்தனர்.செஞ்சியை அடுத்த மேல்களவாய் கிராமத்தை சேர்ந்தவர் காசிலிங்கம் இவருக்கு அம்சவேணி (39)என்ற மகளும், மணிகண்டன் (36) என்ற மகனும் உள்ளனர். அம்சவேணி கடந்த 15 வரு டங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டு திண்டுக்கல் மாவட்டம் கோவில்பட்டியில் வசித்து வருகிறார்.மணிகண்டனுக்கு திரும ணம் ஆகவில்லை. பட்டதாரி வாலிபரான அவர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார்.அவர் தினமும் மது அருந்தி விட்டு வந்து தனது பெற்றோரிடம் தகராறு செய்வாராம் இதனால் காசிலிங்கம் தனது சொத்தான 20 சென்ட் நிலத்தை மகள் அம் சவேணிக்கு தான செட்டில் மெண்ட் செய்துள்ளார். இது மணிகண்டனுக்கு தெரிய வந்துள்ளது.இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பெற்றோரை பார்க்க அம்ச வேணி மேல்களவாய் கிரா மத்திற்கு வந்திருந்தார்.இந்நிலையில் நேற்றுஇரவு வழக்கம் போல் மணிகண்டன் குடித்து விட்டு வந்து பெற்றோரிடம் தகராறு செய்து, அவர்களை திட்டி அடித்தாராம். இதை பார்த்த அம்சவேணி பக்கத்தில் இருந்த கட்டையை எடுத்து தம்பி மணிகண்டனை தலை மற்றும் முகத்தில் சரமாரியாக தாக்கி உள்ளார்.சம்பவ இடத்தில் மயக்கம் அடைந்து விழுந்த மணிகண்டனை சிகிச்சைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக முண்டி யம்பாக்கம் அரசு மருத்துவம னைக்கு அழைத்து செல்லும் போது வழியிலேயே அவர் உயிரழந்துவிட்டார்.இது குறித்து மேல்களவாய் கிராம நிர்வாக அலுவலர் பிரகாஷ் அளித்த புகாரின் பேரில் செஞ்சி காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி தலைமையிலான போலீசார் விரைந்து சென்று சம்பவம் நடை பெற்ற இடங்களை பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து அம்சவேணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.