
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் நீர்நிலை கால்வாயில் கழிவுகள் கலப்பதை கண்டித்து மாவட்ட ஆட்சியரிடம் அதிமுக பிரமுகர் மனு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட ஆட்சியர்
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக சிறுபான்மை பிரிவு இணை செயலாளரும் விவசாயிகள் நீர்வள பாதுகாப்பு நலச்சங்க மாநில ஒருங்கிணைப்பாளருமான டேனி அருள்சிங் என்பவர் அளித்த மனுவில்; மேலகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட சிந்தாமணி நீர்நிலை கால்வாயில் மேலகரம் பேரூராட்சியின் கழிவுநீர்ஓடையினை இணைத்து வருகின்றனர், அதனை தடுத்து முறையாக தூர்வாரி விவசாய பயன்பாட்டிற்கு அதனை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டது,
இதனை விசாரித்த மாவட்ட ஆட்சியர் ஏ கே கமல் கிஷோர் செயல் அலுவலரிடம் கேட்க அவரோ எதையும் இணைக்கவில்லை என்று தெரிவிக்க, அதற்கு பொதுப்பணிதுறையில் இருந்து கால்வாயில் கழிவுநீரை கலந்ததை கண்டித்து செயல் அலுவலருக்கு மூன்று முறை கடிதம் எழுதியாக கூறினார் அதன் பின்னர் அவரிடம் இனி அவ்வாறு செய்யகூடாது என்று எச்சரித்த ஆட்சியர் கூட்ட முடிவில் அனைத்து அதிகாரிகளும் பொதுமக்கள் அளிக்கின்ற மனுக்களுக்கு கடிதம் வாயிலாக மட்டுமே பதில் அளிக்க வேண்டும் இல்லை என்றால் ஒழுங்கு நடவடிக்கை பிரிவு 17 பாயும் என்று கூறியதற்கு அரங்கத்தில் இருந்த விவசாயிகள் கைத்தட்டி ஆரவாரம் செய்து மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்தனர்.
இந்த மனு உரிய நடவடிக்கை எடுத்த பின்னர் சிந்தாமணி நீர்நிலை கால்வாய் சுத்தப்படுத்தி அதன் பாசன பகுதிகள் செழுமையடையும் என்பது நிதர்சனம்.