
கோவை மாவட்டம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உத்தரவின் பேரில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இஸ்லாமி யர்களுக்கு எதிரான வக்பு சட்டத்திற்க்கு எதிர்ப்பு தெரிவித்தும் அச்சட்டத்தை திரும்ப பெற கோரியும், தமிழக ஆளுநர் ஆர். என் ரவியை பதவி விலக கோரியும்கோவை மண்டல மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக மத்திய அரசை கன்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தினை மதிமுக கழக அவை தலைவர் ஆடிட்டர் அர்ஜூனராஜ் தலைமை தாங்கினார். மதிமுக கழக பொருளாளர் பொறியாளர் செந்திலதிபன் கண்டன உரையாற்றினார். ஆட்சி மன்ற குழு செயலாளர் டாக்டர் கிருஷ்ணன், உயர்நிலை குழு உறுப்பினர் ஆர் ஆர் மோகன் குமார், விவசாய அணி செயலாளர் அரங்கசாமி, ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கோவை மாநகர் மாவட்ட செயலாளர் கணபதி செல்வராசு வரவேற்புரையாற்றினார். மேலும் ஆர்ப்பாட்டத்தில் பி.என் இராஜேந்திரன், குகன் மில் செந்தில், அரிமா நாகராஜ், மதிமுக கவுன்சிலர்கள் சித்ரா வெள்ளியங்கிரி, அன்பு என்கிற தர்மராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்