
தேனி மாவட்டம் கம்பம் வட்டம் அனுமந்தன்பட்டி கிராமத்தில் வாழைமரத்தில் மேட்டோக்கிங் குறித்து செயல் விளக்கம் அளித்தார் மதுரை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த நான்காம் ஆண்டு இளங்கலை மாணவி சை.ரூபியா.வாழை சாகுபடியில், பழம் அறுவடை செய்யப்பட்ட பிறகு, தண்டு போன்ற தோற்றமுடைய தண்டுகளை அகற்றுவதே மேட்டோக்கிங் ஆகும் . இந்த செயல்முறை, புதிய கிளைகள் (உறிஞ்சும் தண்டுகள்) வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக செய்யப்படுகிறது, இது இறுதியில் அடுத்த வாழைப்பழ பயிரை உற்பத்தி செய்யும்.இந்த விளக்கம் விவசாயிகளுக்கு பயன் உள்ள வகையில் இருந்தது.