சென்னை, செப்டம்பர் , 2025: தமிழ்நாட்டின் புகழ்பெற்ற மருத்துவமனைகளுள் ஒன்றான பிரசாந்த் ஹாஸ்பிட்டல்ஸ், அதன் ரோபோடிக் அறுவைசிகிச்சை மையத்தின் முதன்மை மருத்துவர் பாரிமுத்துக்குமார், சுகாதார பராமரிப்பில் ஒரு மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியிருப்பதை பெருமிதத்துடன் அறிவித்திருக்கிறது. உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ரோபோ சாதன உதவியுடன் 100 அடிவயிறு அறுவைசிகிச்சைகளை இவர் வெற்றிகரமாக செய்திருக்கிறார். இந்த சாதனை அளவை எட்டியிருக்கும் சென்னையின் முதல் அறுவைசிகிச்சை நிபுணர் என்ற பெருமைக்குரியவரான டாக்டர்.
பாரிமுத்துக்குமார், தமிழ்நாடெங்கிலும் அறுவைசிகிச்சையின் துல்லியத்தையும் மற்றும் நோயாளிகளுக்கான நேர்த்தியான சிகிச்சை பராமரிப்பிலும் புதிய தரநிலைகளை நிறுவி வருகிறார். 340 கிமீ இடைவெளியில் இரு மருத்துவமனைகள் இருக்கின்ற நிலையில் ரோபோடிக் உதவியுடன் டெலிசர்ஜரி எனப்படும் தொலைதூர அறுவைசிகிச்சையை இந்நாட்டில் முதன்முறையாக செய்த முதல் மருத்துவர் என்பது இவரது சாதனைகளுள் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
ரோபோடிக் அறுவைசிகிச்சையில் நிகழ்த்தப்பட்டிருக்கும் இந்த மைல்கல் சாதனைக்கான கொண்டாட்டத்தில், ரோபோடிக் சாதனங்கள் தயாரிப்பில் இந்தியாவின் முன்னணி நிறுவனமான Ssi மந்த்ராவின் தலைமை செயலாக்க அதிகாரி – APAC டாக்டர். விஷ்வா ஶ்ரீவஸ்தவா பங்கேற்றார். உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ரோபோடிக் சாதனங்களை பயன்படுத்தி வெற்றிகரமான 100 அடிவயிறு அறுவைசிகிச்சைகள் என்ற சாதனையை செய்திருக்கும் டாக்டர். பாரிமுத்துக்குமார் அவர்களின் அறுவைசிகிச்சை நிபுணத்துவத்திற்காகவும், தலைமைத்துவ பண்பிற்காகவும் டாக்டர். விஷ்வா பாராட்டி கவுரவித்தார். இரு மருத்துவமனைகளுக்கு இடையே ரோபோடிக் டெலிசர்ஜரியை இந்தியாவில் முதன்முறையாக செய்திருப்பதில் டாக்டர். பாரிமுத்துக்குமாரின் முன்னோடித்துவ பங்கையும் குறிப்பிட்டு அவர் பாராட்டினார்.
இந்த 100 அறுவைசிகிச்சைகளுள் பித்தப்பை அகற்றல், கர்ப்பப்பை அகற்றல், எளிமையான மற்றும் சிக்கலான குடலிறக்க (ஹெர்னியா) அறுவைசிகிச்சைகள், பெருங்குடலுக்கான புற்றுநோய் அறுவைசிகிச்சை, ஆகியவை உள்ளடங்கும். வழக்கமான திறந்தநிலை அறுவைசிகிச்சை முறைகளிலிருந்து, ரோபோ சாதன உதவியுடன் மிக குறைந்த துளையுடன் செய்யப்படும் அறுவைசிகிச்சை உத்திகளுக்கு மாறுவதால் நோயாளிகளுக்கு சிறப்பான பயன்கள் கிடைக்கின்றன. மிகச்சிறிய கீறல்கள், அறுவைசிகிச்சைக்கு பிறகு குறைவான வலி, விரைவாக குணமடைந்து இயல்புநிலைக்கு திரும்புவது மற்றும் சிறப்பான அறுவைசிகிச்சை துல்லியம் ஆகியவை இவற்றுள் முக்கியமானவை.
பிரசாந்த் ஹாஸ்பிட்டல்ஸ்-ன் நிர்வாக இயக்குநர் டாக்டர். பிரசாந்த் கிருஷ்ணா இந்நிகழ்வில் பேசுகையில், எமது நோயாளிகளுக்கு மேம்பட்ட, துல்லியமான சிகிச்சையை வழங்க இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட மிக நவீன மருத்துவ தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில் நாங்கள் வலுவான அர்ப்பணிப்புடன் செயல்படுகிறோம். சரியான நிபுணத்துவத்துடன் மேம்பட்ட தொழில்நுட்பங்களை இணைத்து அனைவருக்கும் சுகாதார சிகிச்சை குறைந்த செலவில் எளிதாக கிடைக்குமாறு செய்வதே பிரசாந்த் ஹாஸ்பிட்டல்ஸ்-ல் எமது செயல்திட்டமாக எப்போதும் இருந்து வருகிறது. எங்களுக்கு மட்டுமன்றி தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த சுகாதார சூழலமைப்புக்கும் இரு முக்கியமான மைல்கல் நிகழ்வுகள் பற்றிய செய்தியை பகிர்ந்து கொள்வதில் இன்று நான் மகிழ்ச்சியடைகிறேன். முதலாவதாக,
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ரோபோடிக் சாதனங்களின் மூலம் 100 அறுவைசிகிச்சைகள் வெற்றிகரமாக செய்யப்பட்டிருப்பது; இரண்டாவதாக, இரண்டு மருத்துவமனைகளுக்கு இடையிலான ரோபோடிக் டெலிசர்ஜரி இந்தியாவில் முதன்முறையாக சமீபத்தில் நடைபெற்றிருப்பது; எமது நோயாளிகள் அனைவருக்கும் குறைந்த செலவில் உயர்தர சிகிச்சை கிடைக்குமாறு செய்வதில் எமது அர்ப்பணிப்புமிக்க பணி இன்னும் தீவிரமாக தொடரும்” என்று கூறினார்.
பிரசாந்த் ஹாஸ்பிட்டல்ஸ் – ரோபோடிக் அறுவைசிகிச்சை மையத்தின் முதன்மை மருத்துவர் பாரிமுத்துக்குமார் கூறியதாவது: “எட்டப்பட்டிருக்கும் இந்த மைல்கல், இலக்கங்கள் என்பதையும் கடந்ததாகும். பாதுகாப்பான மற்றும் குறைவான ஊடுருவலுள்ள அறுவைசிகிச்சைகளின் வழியாக மேம்பட மாற்றப்பட்டிருக்கும் பலரின் வாழ்க்கையை இது குறிக்கிறது. உள்நாட்டிலேயே உருவாக்கப்படுகிற மேம்பட்ட ரோபோடிக் தொழில்நுட்பத்தின் வழியாக நோயாளிகள் எந்த இடத்தில் வசித்தாலும் அவர்களுக்கு துல்லியமான சிகிச்சை பராமரிப்பை வழங்குவதே எமது நோக்கம்”.
SSi மந்த்ராவின் நிர்வாக இயக்குநர் – APAC டாக்டர். விஷ்வா ஶ்ரீவஸ்தவா பேசுகையில், “சிறப்பான துல்லியமும், இதயப்பூர்வமான பேரார்வமும் இணைந்திருக்கும் இம்மாநிலத்தில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ரோபோடிக் தொழில்நுட்பத்தின் வழியாக வளர்ந்து வரும் அறுவைசிகிச்சையின் எதிர்காலத்தை பிரசாந்த் மருத்துவமனையும் மற்றும் டாக்டர். பாரிமுத்துக்குமாரும் நேர்த்தியாக பிரதிபலிக்கின்றனர். ரோபோடிக் மற்றும் டெலிசர்ஜரி, இவர்களின் முன்னோடித்துவ பணியானது இம்மாநிலத்தில் சுகாதார சேவை வழங்கப்படும் முறையை மேம்படுத்தி புதிய தரஅளவுகோல்களை நிறுவி வருகிறது. இந்தியாவிலேயே உருவான ஒரு பெருமைமிகு நிறுவனமாக, எமது உள்நாட்டு உருவாக்கமான ரோபோடிக் தொழில்நுட்பம் எண்ணற்ற மக்களின் உயிரைக் காப்பாற்றி அவர்களின் வாழ்க்கையை ஆக்கப்பூர்வ மாற்றத்தை ஏற்படுத்தி வருவதை காண்பது எனக்கு பெருமகிழ்ச்சியளிக்கிறது. இந்த மாற்றத்தை உருவாக்கும் நடவடிக்கையில் முதன்மை வகிக்கும் பிரசாந்த் ஹாஸ்பிட்டல்ஸ்-க்கு எனது மனமார்ந்த நன்றி” என்று கூறினார்.
தரண் ஹாஸ்பிட்டல்ஸ்-ன் நிறுவனர் & நிர்வாக இயக்குநர் டாக்டர். V. செல்வராஜா இந்நிகழ்வில் உரையாற்றுகையில் கூறியதாவது: “டாக்டர். பாரிமுத்துக்குமார் அவர்களின் சாதனையானது ஒரு தனிப்பட்ட சாதனை மட்டுமல்ல; தமிழ்நாட்டில் அறுவைசிகிச்சை துறையிலேயே ஒரு மகத்தான மாற்றத்தை உருவாக்கும் பெருமைமிகு தருணமாகும். ரோபோடிக் உதவியுடன் 100 அடிவயிறு அறுவைசிகிச்சைகளை நிறைவு செய்திருப்பதும் இரு மருத்துவமனைகளுக்கு இடையே டெலிசர்ஜரியை முன்னோடித்துவமாக நிகழ்த்தியிருப்பதும்,
தொழில்நுட்பத்தின் ஆற்றலை உலகறியச் செய்கிறது; நகரங்களுக்கும், கிராமப்புறங்களுக்கும் இடையில் சுகாதார சிகிச்சையில் நிலவும் இடைவெளிகளை நிரப்ப இத்தகைய தொழில்நுட்பம் பெரிதும் உதவும் என்பதில் ஐயமில்லை. தரண் மருத்துவமனையில் சிகிச்சை துல்லியம், பாதுகாப்பு மற்றும் நோயாளிகள் சிகிச்சையை எளிதாக பெறும் நிலை ஆகியவற்றை மறுவரையறை செய்கிற இதுபோன்ற புரட்சிகர முன்னேற்றங்களோடு இணைந்து செயல்படுவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.”
பிரசாந்த் ஹாஸ்பிட்டல்ஸ் குறித்து: பிரசாந்த் ஹாஸ்பிட்டல்ஸ், தொழில்முறை நிபுணத்துவமும், பயிற்சியும் பெற்ற நிபுணர்களைக் கொண்டு நவீன, உயர்தர உடல்நல சிகிச்சை சேவைகளை வழங்குகின்ற பன்முக சிறப்பு பிரிவுகளை உள்ளடக்கிய ஒரு பிரபல மருத்துவமனையாகும். சென்னையில், வேளச்சேரி மற்றும் கொளத்தூர் ஆகிய இடங்களில் அமைந்துள்ள பிரசாந்த் சூப்பர் – ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, இம்மாநகரில் சிறந்த சிகிச்சைக்கு சிறப்பாக அறியப்படும் மல்ட்டி – ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளுள் ஒன்றாகும். நோயாளிகளுக்கு மிக நேர்த்தியான உடல்நல பராமரிப்பு சேவைகளை வழங்குவதன் மூலம் சர்வதேச அளவில் புகழ்பெற்ற மருத்துவ நிலையமாக உருவாவதே இதன் தொலைநோக்கு திட்டமாகவும், குறிக்கோளாகவும் இருக்கிறது. சிறந்த, தரமான சிகிச்சையை வழங்குவதன் மூலம் நோயாளிகளின் நம்பிக்கையை பெறுவது இம்மருத்துவமனை குழுமத்தின் செயல் இலக்காக இருக்கிறது. தரமான சிகிச்சை பராமரிப்பு, மரியாதை, உயர் செயல்திறன், சிகிச்சையின் பயனளிக்கும் தன்மை, பாதுகாப்பு, மக்கள் மத்தியில் ஆரோக்கியம் மீதான விழிப்புணர்வை உருவாக்குவது ஆகிய மதிப்பீடுகளைச் சார்ந்தே பிரசாந்த் சூப்பர்-ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளின் செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. எந்தவொரு நோய் பாதிப்பிற்கும் உரிய மருத்துவ பரிசோதனைகள், நோயறிதல்களுக்கும் மற்றும் அவைகளுக்குரிய சிகிச்சைகளுக்கும் பல்வேறு ஆரோக்கிய பராமரிப்பு தொகுப்பு திட்டங்களையும் பிரசாந்த் சூப்பர் – ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டல்ஸ் வழங்கி வருகிறது.
