
பொன்னேரி ஜுலை 2
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் மறைந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் அமைச்சரும்,கழகத் துணைப் பொதுச் செயலாளரும்,மாநில ஆதிதிராவிடர் நல குழு தலைவராக இருந்தவர் க.சுந்தரம் அவரது பிறந்த நாளை முன்னிட்டு மீஞ்சூர் பேரூர் கழக திமுக சார்பில் பஜார் பகுதியில் பிறந்தநாள் விழா நடைபெற்றது, இந்நிகழ்ச்சிக்கு பேரூர் கழக செயலாளர் க.சு தமிழ்உதயன் தலைமை வகித்து நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்திருந்தார் இதில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வல்லூர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ் கலந்து கொண்டு க. சுந்தரம் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி இனிப்புகளை வழங்கினார், அதனைத் தொடர்ந்து அங்கு கூடியிருந்த பொது மக்களுக்கு அருஞ்சுவை உணவு வழங்கி சிறப்பித்தார் இதில்
அன்புவாணன்,கதிரவன், எம்.எல்.ரவி, டி.ஜெ. மனோஜ் (எ) தமிழரசன், டாக்டர் பரிமளம் விஸ்வநாதன், ஜெகதீசன், தமிழ் பிரியன், முப்புராஜ்,குமார், உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
