
கடலாடி அரசுக்கல்லூரியில் முதலாம்ஆண்டு மாணவர்களுக்கான அறிமுகபயிற்சி தொடக்கம் கடலாடி; இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அரசுக்கல்லூரியில் முதலாம் ஆண்டுமாணவர்களுக்கான ஏழு நாள் அறிமுகபயிற்சி நடைபெறஉள்ளது.முதல்நாள் அறிமுகபயிற்சிக்கு கல்லூரி முதல்வர்(பொ)முனைவர் அன்னதாசன் தலைமைதாங்கினார். ஏழுநாள் அறிமுகபயிற்சி ஒருங்கிணைப்பாளர்கள் விரிவுரையாளர் கலையரசன் ,கலாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விரிவுரையாளர் நீரா.பொன்முத்து வரவேற்றார்.இதில் சிறப்புவிருந்தினராக பட்டிமன்றபேச்சாளர் துரைப்பாண்டியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.இந்நிகழ்வினை கணினி நிகழ்ச்சி நிரல்னர் பாலமுருகன் மற்றும் அனைத்துறை பேராசிரியர்கள்,அலுவலர்கள் ஏற்பாடு செய்தனர்.இதில் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவமாணவிகள் கலந்துகொண்டனர்.இறுதியாக விரிவுரையாளர் காசி நன்றி கூறினார்.
