
மதுராந்தகத்தில் ஜுலை- 2
உள்ள அருள்மிகு ஸ்ரீ ஏரி காத்த கோதண்டராமர் திருக்கோவிலில் ஆனி மாத பிரம்மோற்சவ விழா
பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான பெரியதேர் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது கோவிந்தா கோவிந்தா கோஷமிட்டு வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ ஏரி காத்த கோதண்டராமர் திருக்கோவிலில் ஆனி மாத பிரம்மோற்சவ விழா கடந்த 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து தினம் தோறும் காலை மற்றும் மாலை வேலைகளில் சிம்ம வாஹனம், சூரிய பிரபை, கருட ஸேவை, அனுமந்த வாஹனம், சேஷ வாஹனம், யாஸி வாகனம், யானை வாஹனம்
உள்ளிட்ட வாகனங்களில் கருணாகர பெருமாள் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக உலா வந்தார்.
இதனைத் தொடர்ந்து நேற்று இரவு பெரிய பெருமாளான ஸ்ரீ ஏரி காத்த கோதண்டராமர் லக்ஷ்மணன் மற்றும் சீதாதேவி ஆகிய சுவாமிகளுக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வெள்ளித்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் அருள் பாலித்து முக்கிய வீதிகள் வழியாக வளம் வந்தார்.
அதனைத் தொடர்ந்து இன்று கருணாகர பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியிடம்
மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் எழுந்தருளி அருள் பாலித்தனர்.
இதனைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா கோசமற்றவாறு தேரில் படம் பிடித்து தேரை இழுத்தனர்.
இந்த நிகழ்ச்சியை கோவில் செயல்அலுவலர் வெங்கடேசன் மற்றும் கோயில் ஊழியர்கள் சிறப்பாக செய்திருந்தனர் மற்றும் நகரின் முக்கிய மாடர்ன் வீதிகளில் முக்கியமான பிரமுகர்களால் அன்னதானம் வழங்கப்பட்டது.
