Oplus_16908288
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த ஆலம் பூண்டியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ ரங்கபூபதி பொறியியல் கல்லூரி – ஸ்ரீ ரங்கபூபதி கல்விக் குழுமத்தின் சார்பில் நடைபெற்ற “நாயகன் விழா – 2026” வெகு விமர்சையாகவும், மாணவர்களுக்கு புதிய இலட்சியங்களையும் தன்னம்பிக்கையையும் விதைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க கல்வி விழாவாகவும் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாண்புமிகு திரு. கமல்ஹாசன் அவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, ஆயிரக்கணக்கான மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் எழுச்சியூட்டும் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து மாணவர்களுடன் நேரடியாக கலந்துரையாடி, அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு தெளிவான மற்றும் ஊக்கமளிக்கும் பதில்களை வழங்கினார். அவரது உரையும் கலந்துரையாடலும் மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
விழாவில் ஸ்ரீ ரங்கபூபதி கல்விக் குழுமத்தின் செயலாளர் திரு. RP. ஸ்ரீபதி அவர்கள், சிறப்பு விருந்தினர் திரு. கமல்ஹாசன் அவர்களை சிறப்பாக அறிமுகப்படுத்தி, அவரது பல்துறை ஆளுமை, கலைப்பணி, பொதுவாழ்வில் ஆற்றிவரும் பங்களிப்பு மற்றும் இளைஞர்களுக்கான ஊக்கமளிக்கும் பணிகளை எடுத்துரைத்தார்.
கல்விக் குழுமத்தின் தாளாளர் திரு. ரங்கபூபதி அவர்கள் தலைமையுரை ஆற்றி, கல்வி, ஒழுக்கம், சமூகப் பொறுப்பு மற்றும் இளைஞர்களின் முன்னேற்றம் குறித்து சிறப்பாகப் பேசினார். மேலும் கல்விக் குழுமத்தின் இயக்குநர் திருமதி. சாந்தி பூபதி அவர்கள் மற்றும் ஸ்ரீ ரங்கபூபதி பன்னாட்டு பள்ளி மற்றும் ஸ்ரீ ரங்கபூபதி மெட்ரிக் பள்ளியின் நிர்வாக இயக்குநர் திருமதி. சரண்யா ஶ்ரீபதி அவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் கல்லூரி மாணவர்கள் சிறப்பு விருந்தினரை வரவேற்று வரவேற்புரையாற்றினர்.
இதனைத் தொடர்ந்து, ஸ்ரீ ரங்கபூபதி கல்விக் குழுமத்தின் பொறியியல், செவிலியர், மருந்தியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகள், மேலும் மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளின் கல்விச் சாதனையாளர்கள் கௌரவிக்கப்பட்டனர். அதோடு, பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இருந்து மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவியர்களுக்கும் பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டன.
சமூக நலப் பணிகளில் சிறந்து விளங்கிய சமூக ஆர்வலர்களுக்கும் சிறப்பு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கல்வியாளர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை, பொதுச் சுகாதாரத் துறை அதிகாரிகள், உள்ளாட்சி நிர்வாக பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், யூடியூப் படைப்பாளர்கள், ஊடக மற்றும் பத்திரிகை நண்பர்கள், பல்வேறு கல்லூரி மற்றும் பள்ளி அனைத்து கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆறாயிரம் மாணவர்களுக்கு மேல் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியின் அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டிருந்ததால், விழா ஒழுங்குமுறையுடனும் உற்சாகத்துடனும் வெற்றிகரமாக நடைபெற்றது.
பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் ஆர் ராமதாஸ் வாழ்த்துறை வழங்கினார்.
முடிவில், கல்லூரி முதன்மை அலுவலர் டாக்டர் ஆர். மணிகண்டன் நன்றியுரை வழங்கி, நிகழ்ச்சிக்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர், நிர்வாகத்தினர், அரசு அதிகாரிகள், கல்வியாளர்கள், ஊடக நண்பர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் விழா வெற்றிக்காக அயராது உழைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.
“நாயகன் விழா – 2026” மாணவர்களின் கல்விச் சாதனைகளைப் பாராட்டியதோடு மட்டுமல்லாமல், உயர்ந்த இலட்சியங்களுடன் சமூகப் பொறுப்புணர்வுடன் வாழ வேண்டும் என்ற ஊக்கத்தையும் வழங்கிய மறக்க முடியாத கல்வி விழாவாக அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பெற்றது.
