oppo_2
திருவள்ளூர் மாவட்டம்,மீஞ்சூரில் உள்ள சக்தி நர்ஸிங் ஹோமினை நடத்தி வருபவர் ஆன்மீக செம்மல்,சமூக ஆர்வலர் டாக்டர். விஜய ராவ்.
இவர் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் ச. ஜோசப் விஜய் மீது நம்பிக்கை வைத்து தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.அதன் பின் மாண்புமிகு முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த வாரம் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடத்தினார்.
அதன் பின்னர் வாராவாரம் ஞாயிறு மாலை 4 மணிமுதல் 5 மணிவரை தன்னுடைய கிளினிக்கில் மருத்துவ முகாமினை தவெக சார்பில் நடத்தி வருகிறார்.
ரத்த அழுத்த பரிசோதனை,சர்க்கரை அளவு பரிசோதனை,எடை சரிபார்த்தல்,மூட்டுவலி, தைராய்டு உள்ளிட்ட பல்வேறு வியாதிகளுக்கு பரிசோதனைகளுடன் பொது சிகிச்சைகளுக்கான மருத்துவம் நடைபெற்று வருகிறது.
மேலும் உயர்ரக மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
இதனை ஆன்மீகச் செம்மல்,சமூக ஆர்வலர் மருத்துவர் விஜயராவ் அனைவருக்கும் வழங்கினார்.மேலும் இந்த வியாதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விளக்கவுரையும் ஆற்றி வருகிறார்
