
திருவண்ணாமலை தமிழக வெற்றிக் கழக தலைவரும் முதலமைச்சருமான ஜோசப் விஜயின் 52வது பிறந்த நாளை முன்னிட்டு தண்டராம்பட்டு ஒன்றியம் ஆத்திப்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கான RO குடிநீர் வசதியை தெற்கு மாவட்ட செயலாளர் கே. பாரதிதாசன் தொடங்கி வைத்தார், அத்துடன் மாணவர்களுக்கு குடிநீர் புட்டிகள் மற்றும் நோட்டு புத்தங்களையும் வழங்கினார் இந்நிகழ்ச்சியினை வழக்கறிஞர் வில்பிரைட் ஏற்பாடு செய்திருந்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர் டாக்டர் பழனி, செங்கம் ஒன்றியம் மேல் பென்னாத்தூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முருகன் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
