
அரியலூர், ஜூலை 24: அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணா ளினி தலைமை வகித்தார்.
கூட்டத்தில் விவசாயிகள் முன்வைத்த கோரிக்கைகள் மற்றும் புகார்களுக்கு பல்வேறு துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். மாவட்டத்தில் உள்ள விதை, உரம், உயிர் உரங்களின் இருப்பு நிலை, மழை அளவு மற்றும் வேளாண்மைத் திட்டங்கள் குறித்து அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.வேளாண்மைத் துறை சார்பில் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் குறித்து விளக்கமளிக் கப்பட்டது. இயந்திரம் மூலம் நெல் நடவு செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.4,000 பின் ஏற்பு மானியம் வழங்கப்படுவதுடன், நெல் விதை, உயிர் உரம் மற்றும் நுண்ணூட்ட உரங்களுக்கும் மானியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இத்திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் தங்கள் வட்டார வேளாண்மை அலுவலகங் களில் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது.
மேலும், வேளாண் பொறியியல் துறை சார்பில் இயந்திர இ-வாடகை திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட மனுக்களை ஆட்சியர் பெற்றுக்கொண்டு, அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
