
தென்காசி ஜூலை ; 28 –
மாவட்டம் குற்றாலம் தெட்சண மாற நாடார் சங்க ஹாலில் தமிழ்நாடு உறவின் முறைகள் கூட்டமைப்பு சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா, கூட்டமைப்பின் நான்காம் ஆண்டு விழா, பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா என முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு கூட்டமைப்பின் கௌரவத் தலைவர் முன்னாள் நீதிபதி பாலமுருகன், கௌரவ ஆலோசகர் சிவ.ராமர், நிறுவனத் தலைவர் அகர கட்டு லூர்து நாடார் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். முன்னாள் ராயகிரி இந்து நாடார் உறவின்முறை கமிட்டி தலைவர் அம்மையப்பன் நாடார், குற்றாலம் நாராயணன் நாடார், தென்மண்டல கல்வி குழு அமைப்பாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச் செயலாளர் கொட்டாகுளம் கணேசன் வரவேற்றார். கூட்டமைப்பின் நிர்வாகிகள் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக டாக்டர் கலைக்கதிரவன்
எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பேசினார்.
இந்த விழாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
குற்றாலத்தில் காமராஜருக்கு தமிழக அரசு சார்பில் முழு உருவச்சிலை நிறுவ வேண்டும். நாடார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட கோவில்கள் மற்றும் சங்கங்களுக்கு பாத்தியப்பட்ட வணிக வளாகங்கள் போன்ற இடங்களில் நாங்கள் காமராஜர் சிலையை நிறுவ அனுமதி தர வேண்டும்.
கோவில் கொடை விழா மற்றும் திருவிழா காலங்களில் நாங்கள் நடத்துகிற கச்சேரி நிகழ்ச்சிக்கு நள்ளிரவு 12 மணி வரை அனுமதி தர வேண்டும். மேலும் இது தொடர்பாக போலீசார் பாதுகாப்பு வழங்குவதற்கு கட்டணம் வசூலிக்க கூடாது, என்பது உள்ளிட்ட பல தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
முடிவில் கூட்டமைப்பின் மாநில துணைத்தலைவர் செந்தூர் செல்வம் நாடார் நன்றி கூறினார்.
