
பண்ருட்டி,செப்.4
தமிழக முதல்வர் ஜோசப்விஜய் தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைய அடித்தளமாக இருந்தவர் ஜேப்பியார் ஸ்டீல் அதிபர் ஜாகீர் ஹீ சேன் என பண்ருட்டியில் நடந்த திருமண விழாவில்இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் காதர்மொய்தீன் பேசினார்.
கடலுார் மாவட்டம், பண்ருட்டி பைத்துமால் டிரஸ்ட் செயலாளர், ஜேப்பியார் ஸ்டீல்ஸ் உரிமையாளர் ஜாகீர் ஹீசேன் அவர்களின் தங்கைமகன்முகமதுஅலி ஜின்னா அவர்களின் மகன்அபூக்காஷ்க்கும், , மணமகள் ஆப்ரீன் பாத்திமாவிற்கும் திருமணம் கடந்த 30 ம்தேதி பண்ருட்டி எல்.என்.புரம் ஆர்.கே.எம்.கன்வென்ஷனில் நடந்தது.
இத்திருமண விழாவிற்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் காதர்மொய்தீன் தாங்கினார். ஜேப்பியார் ஸ்டீல் அதிபர் ஜாகீர்ஹீசேன் விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றார்.
பின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி காதர்மொய்தீன்
அவர்கள் பேசியதாவது : –
அளவற்ற அன்பும், நிகரற்ற கருணையும் கொண்ட எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருவருள் வல்ல அல்லாஹ்வின் திருவருள் உங்கள் அனைவரின் மீதும் நிறைவாக பொழியட்டும். அன்புக்கும், மிகுந்த மரியாதைக்கும் உரிய உலமா பெருமக்களே, முன்னணி தலைவர்களே, அமைச்சர் பெருமக்களே இந்த திருமண விழாவிற்கு வருகை தந்து வாழ்த்தி இந்த திருமண விழாவை சிறப்பிக்கும் அனைவருக்கும் எனது அன்பான அஸ்லாம் அலைக்கும்.
எல்லாம் வல்ல அல்லாவின் பேரருளும்,கிருபையும், பரசுத்துக்கு உங்கள் ஒவ்வொருவருடை வாழக்கையிலும் நிறைவாக இருக்க வேண்டும் என்று உங்கள் அனைவரோடும் இணைந்து நானும் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
இன்று நாம் அனைவரும் இங்கே ஒரு சாதாராண நிகழ்ச்சிக்காக கூடியிருக்கவில்லை. இரண்டு உள்ளங்கள் ஒன்றாக இணைகின்ற ஒரு புனிதமான நிகழ்வில் இரு குடும்பங்கள் ஒன்றாக இணைகின்ற ஒரு மகிழ்ச்சியான தருணம். நமது அன்புக்குரிய சகோதரரர் ஜாஹீர்ஹீசேன் அவர்களின் இல்ல திருமண விழாவில் நாம் கூடியிருக்கிறோம்.
அன்பிற்குரிய மணமகன் அபூக்காஷ் அவர்களுக்கும், மணமகள் ஆப்ரின்பாத்திமா அவர்களுக்கும் உலமாக பெருமக்களின் வாழ்த்துக்களோடு, சமுதாய பெரியோர்களின் வாழ்த்துக்களோடு திருமணம் சிறப்பாக நடந்தது.
இந்த நேரத்தில் மணமக்களை வாழ்த்த வந்திருந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆனால் அன்பிற்குரியவர்களே திருமணவிழாவில் நாம் கொடுக்ககூடிய மிகப்பெரிய பரிசு என்ன தெரியுமா, பணம் அல்ல, பொருள் அல்ல. நம்முடைய வேண்டுதல் , நம்முடைய பிரார்த்தனை . ஆன்மீக பெரியவர்கள் ஒரு அழகான விஷயத்தை சொல்லுவார்கள். இறைவனிடம் கேட்கும்போது உலகத்தில் உள்ள கவலையெல்லாம் சிறிதுநேரம் மறந்துவிடுவோம். நம்முடைய இதயத்தை திறந்து இந்த மணமக்களுக்காக அல்லாவிடம் பிரார்த்திப்போம். இந்த மணமக்களை வாழ்க்கையில் எத்தனை ஆண்டுகள் வாழ வேண்டும் என்று நாம் நினைக்கிறோமா அதை விட அதிகமான ஆண்டுகள் அவர்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். அவர்களுடைய இல்லத்தில் எப்போதும் அன்பு இருக்க வேண்டும். இல்லத்தில் அமைதி இருக்க வேண்டும்.
எல்லாம் வல்ல இறைவன் இந்த மணமக்களுக்கு நீண்ட ஆயுளும், நல்ல ஆரோக்கியம் மனநிறைவோடு வாழ அருள் புரிய பிரார்த்திப்போம்.
அருமை நண்பர் பண்ருட்டி ஜாகீர்ஹீசேன் இவர்களின் இல்லத்திருமண விழாவில் மணமக்களை வாழ்த்திஅமர்ந்துள்ள நண்பர் ஜாகீர்ஹீசைன் அவரோடு இணைந்து சமுதாய பணி செய்திடும் நோபல்மரைன் குருப் நிறுவனர் அல்ஹாஜ் ஷாஹீல்அமீத் அவர்களும் சிறப்பான நற்பணிகளை, சமுதாய பணிகளை மார்க்கப்பணிகளை மட்டுமல்ல. எல்லாவற்றிற்கும் மேலாக மக்களுடைய பணிகளை அற்புதமாக சொல்ல பெருமையோடு பேசியிருக்கிறார்கள்.
ஒன்றை மட்டுமே நான் சொல்ல விரும்புகிறேன். இன்று தமிழகத்தில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் நல்லாட்சி நடந்து கொண்டிருக்கிறது.
இதுவரை யாரும் சொல்லாத ஒரு வாக்குறுதியை ஊழல் இல்லாத ஆட்சியை தருவேன் என உறுதியோடு கூறி அந்த நோக்கத்தோடு, தமிழகத்தில் நல்லாட்சியை நடத்திக்கொண்டிருக்கிறார். அவர் அடிக்கடி ஒரு வார்த்தை நாம் கேட்டிருக்கிறோம் கான்பிடன்ட்டாக இருங்கள் நம்பிகையோடு இருங்கள், நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம் என்ற வார்த்தை நம்பிக்கையூட்டும் வார்த்தைகளை அவர் தொடர்ந்து சொல்லி வருகிறார். அதே நம்பிக்கையோடும் வெற்றி நிச்சயம் என்ற உறுதியோடும். இஸ்லாமிய மார்க்கத்தில் நபிகள் நாயகம் அவர்கள் கணவன் மனைவி வாழ வேண்டிய வாழ்க்கையை பற்றி பல அழகான போதைனைகளை வழங்கியுள்ளார். ஒரு கணவனுடைய பொறுமை. ஒரு கணவருடையை சிறப்பு, ஒரு கணவனுடைய தனித்துவம் ஆகியவற்றை உண்மையாக மதிப்பிடிக்கூடியவர் யார் உலகம் அலு்ல. அவரை சுற்றியிருப்பவர்கள் அல்ல. அவருடைய மனைவி தான். மனைவியிடம் குறைகளே , தவறு இருக்குமாயின் அதை பெரிதுபடுத்தி பேசக்கூடாது மனைவியின் நன்மைகளை பார்க்க வேண்டும். கணவர் என்பவர் மனைவியின் குறைகளை தேடுபவர் அல்ல. அவருடைய நன்மைகளை பார்ட்டுபவர் மனைவி. இப்படித்தான் ஒரு குடும்பம் அன்போடும், அமைதியோடும் மகிழ்ச்சியோடும் வாழ முடியும்.
தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி ஜோசப்விஜய் அவர்கள் தலைமையில் நடந்து வருகிறது. இந்த ஆட்சி அமைவதற்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் நாங்களம், ஒரு பங்களிப்பை செய்துள்ளோம்.
அந்த ஆதரவை வழங்க வேண்டும் என எங்களை துண்டியது யார் , தமிழ்நாட்டில் உள்ள முஸ்லீம் சமுதாய மக்கள் மட்டுமல்ல. வெளிநாடுகளில் வாழும் தமிழ்நாட்டை சேர்ந்த முஸ்லீம்கள் அனைவரும் இந்த ஆட்சிக்கு ஆதரவு தர வேண்டும் என வற்புறுத்தினார்கள். ஆனால் அந்த ஆதரவை வலியுறுத்துவதற்காக எங்கள் அலுவலகத்திற்கு நேரடியாக வந்து 3 நாட்கள் தங்கி இருந்து, எங்களோடு பேசி இந்த ஆதரவை வழங்க வேண்டும் என வற்புறுத்திய அன்பு சகோதாரர் ஜாகீர்ஹீசைன் அவர்களை சாரும்.
இதனை நான் இங்கே சொல்வதற்கு பாராட்டுவதற்காக மட்டுமல்ல. ஒரு வரலாற்று செய்தியை உங்களிடம் பதிவு செய்ய தான் . ஜாகீர்ஹீசைன் அவர்களின் தொடர் முயற்சியின் காரணமாக தான் நாங்கள் 2 சட்டமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுத்து அவர்களை ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைத்தோம்.
ஆட்சியின் போது அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என கேட்டுக்கோண்டோம். அவரும் எங்களை அழைத்து அமைச்சரவையில் பொறுப்பு வழங்கினார். அதன்பேரில் அமைச்சராக ஷாஜகான் பொறுப்பேற்று சிறப்பாக பணியாற்றி வருகிறார். சிறுபான்மை சமுதாயத்தில் முஸ்லீம் சமுதாயத்திற்காக வக்பு வாரியத்திற்காக எத்தனையோ அறிவிப்புகள் கடந்த 100 ஆண்டுகளில் வந்துள்ளன.
தமிழக வரலாற்றில் இதுவரை நடக்காத முக்கியமான அறிவிப்பு . பள்ளிவாசல்கள், மதராசாக்கள், கபரஸ்தான்கள் உள்ளிட்ட கட்டட பணிகள் கடை போன்றவை அமைக்க தமிழக அரசு 100 கோடி ஒதுக்கியுள்ளது. இது மிகப்பெரிய அறிவிப்பு. அதிலும் வட்டியில்லா கடனாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார் தமிழக முதல்வர்.
இத்தகைய அறிவிப்பு வெளியிட்ட தமிழக முதல்வர் ஜோசப்விஜய் எங்களுடைய நன்றி, பாராட்டுதல், வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு தேசிய தலைவர் காதர்மொய்தீன் பேசினார்.
விழாவில் இந்திய யூனியம் முஸ்லீம் லீக் மாநில முதன்மை துணை தலைவர் அப்துல்ரஹ்மான், வக்பு வாரிய தலைவர் நவாஸ்கனி, வி.சி.க.தலைவர் திருமாவளவன், அமைச்சர்கள் ஷாஜகான், ராஜ்குமார், முன்னாள் அமைச்சர் சம்பத், எஸ்.டி.ஐ.கட்சி தலைவர்நெல்லை முபாரக்நோபால், கும்பகோணம் ஹலீமா பவுண்டேஷன் சாகுல்அமீது, சென்னை சத்யபாமாக நிகர்நிலைபல்கலைகழக வேந்தர் மரியாஜான்சன், பண்ருட்டி போலீஸ் லைன் இமாம் அப்துல்காதர், பண்ருட்டி பெரிய பள்ளிவாசல் ஆசிரியர் மல்லவிஹாபிழ் நுார் முகம்மது ஆகியோர் மணமக்களை வாழ்த்தி பேசினர்.
இதில் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., அருளரசு, நகராட்சி சேர்மன் ராஜேந்திரன், எஸ்.வி.ஜீவல்லர்ஸ் உரிமயைார் அருள், முன்னாள் நகராட்சி சேர்மன் பன்னீர்செல்வம், மாவட்ட தி.மு.க.துணை செயலர்கள் தணிகைசெல்வம், ஆனந்திசரவணன், தமிழக இஸ்லாமிய சுன்னத் ஜமாத் செயலாளர் ஷேக் நூர்தீன்ஒயிட்ஹவுஸ் முகமதுஇலியாஸ், அபதாபி அதீப் குழும தலைவர் முகமதுஅன்சாரி, மாநில துணை செயலாளர் அப்துல்ரஹ்மான், ரப்பாணி முஸஅலீம் மாணவர் பேரவை மாநில தலைவர் அன்சர்அலி, தென்காசி மாவட்ட செயலர் சையது பட்டாணி பாட்டாளி மக்கள் கட்சி நகர செயலாளர் ஆனந்த். , ஹலிமா ஸ்டீல் கார்ப்பரேஷன் SMJமெட்டல்ஸ் உரிமையாளர் A. சுல்தான் அஹமத் பண்ருட்டிநூர் முகமது ஷா தர்கா நிர்வாக கமிட்டி தலைவர் சித்திக், அறங்காவலர் அபுல்கலாம்ஆசாத், நிர்வாக கமிட்டி உறுப்பினரகள் ஜாகீர்உசேன், காசீம், ஜூபைர்அலி, இஸ்லாமிய பைத்துமால் டிரஸ்ட் தலைவர் இதயத்துல்லா, இணை தலைவர் ஹப்பூர்ரஹ்மான், நவாஸ்அகமது, பொருளாளர் மொய்தீன்கான், இணை செயலாளர்கள் அமையா அப்துல்கனி, ஹசீனாபேகம், சாதிக்மொய்தீன், சுதல்தான்அகமது, ஜேப்பியார் நிர்வாக இயக்குனர் முகம்மதுதமிழ்நாடு தர்காக்கள் ஜமாத் நிர்வாகி அன்சர் பாஷா ஆகியவர்கள் உள்ளிட்டு ஆயிரக்கணக்கானவர்கள் திருமண விழாவில் கலந்து கொண்டனர்.
