
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் வேடவாக்கம் கிராமத்தில் வசித்து வரும் திரு.சே.ஏழுமலை இந்து முன்னணி இயக்கத்தில் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட செயலாளராக சமுதாயப் பணி செய்து வருகிறார். இவர் மாவட்ட நிர்வாகத்திற்கு இந்து முன்னணி சார்பில் கோரிக்கை வைத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது கடந்த ஆடி மாதத்தில் நடைபெற்ற திருவிழாக்களில் பல இடங்களில் வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனர்களில் அம்மனை ஆன்மீகத்திற்கு புறம்பாக சித்தரிக்கப்பட்டு பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. மேலும் சர்ச்சைக்குரிய வாசகங்களும் வன்முறையை தூண்டக்கூடிய வாசகங்களும் இடம்பெற்று இருந்தது. இந்த செயல் ஆன்மீகத்திற்குப் புறம்பானதாகவும் கடவுளை அவமதிப்பதுடன், அமைதியைச் சீர்குலைக்கும் விதமாகவும் அமைந்திருந்தன. இந்த பிளக்ஸ் பேனர்கள் கடவுளை அவமதிக்கும் விதமாக இருந்தது. இச்செயல் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது போன்ற செயல்களை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது வருகின்ற விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வைக்கப்படும் பிளக்ஸ் பேனர்களில் விநாயகர் பெருமானின் படத்தை ஆடி மாத திருவிழாக்களில் அம்மனின் படத்தை ஆன்மீகத்துக்கு எதிராக தவறாக சித்தரித்தது போன்று இல்லாமல், முறையான விநாயகப் பெருமானின் படத்தை விளம்பரப் பலகைகளில் (Flex Boards), பயன்படுத்த வேண்டும் எனவும், சர்ச்சைக்குரிய, வன்முறையை தூண்டக்கூடிய, பொது அமைதியை சீர்குலைக்க கூடிய வாசகங்களை பயன்படுத்தக் கூடாது என இந்து முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இது போன்ற செயல்களை தடுக்கும் வகையில் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரும்பிளக்ஸ் டிசைனிங் செய்யும் கடைகளுக்கு இது சம்பந்தமாக ஒரு சுற்றரிக்கையை பத்திரிகை வாயிலாக வெளியிடுமாறு கோரிக்கை வைத்துள்ளார். அதனை மீறும் பிளக்ஸ் டிசைனிங் செய்யும் கடைகள் மீதும் பிளக்ஸ் வைக்கும் நபர்கள் மீதும் தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
