“புதுச்சேரியின் ஆன்மிக மற்றும் கலாச்சார வாழ்க்கையில் எம்.ஜி. சாலை ஒரு முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. ஸ்ரீ வேதபுரீஸ்வரர் கோயிலுக்கு எதிரே எங்கள் புதிய ஷோரூமைத் திறப்பதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம்,” என்று Giri Trading Agency Private Limited நிறுவனத்தின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
“இந்த ஷோரூம் ஒரு விற்பனை நிலையம் மட்டுமல்ல; இந்தியாவின் வாழும் பாரம்பரியங்களுடன் தொடர்புகொள்ள விரும்பும் குடும்பங்கள், அன்பர்கள் மற்றும் வருகையாளர்கள் ஒன்றுகூடும் ஒரு கலாச்சாரத் தளமாகவும் இது அமையும். புதுச்சேரி மக்களுடன் இணைந்து திருவிழாக்கள் மற்றும் சமூக நிகழ்வுகளைக் கொண்டாட ஆவலுடன் காத்திருக்கிறோம்,” என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
சிறப்பு விருந்தினர்கள்
இந்தப் பிரமாண்டத் திறப்பு விழாவில் புதுச்சேரி முதலமைச்சர் திரு. என். ரங்கசாமி அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டதோடு கிளையை திறந்து வைத்த்தார். அவருடன் எம். எல். ஏ திரு விக்னேஷ் கண்ணன் அவர்களும் மதுரை ஆதீனம் திரு விஷ்வ லிங்க தம்பிரான் அவர்களும், அகில பாரதீய சன்னியாச சங்க பொது செயலாளர் வேதாந்த ஆனந்தா அவர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
புதுச்சேரி முதல மைச்சர் அவர்கள், கிரி யை வாழ்த்தி பேசுகையில், “புதுச்சேரி மக்களுக்கு ஒரே இடத்தில் அனைத்து ஆன்மீகப் பொருட்களும் கிடைப்பதோடு, ஈஸ்வரன் கோயிலுக்கு மிக அருகில் இருப்பது, கூடுதல் சிறப்பு. மேலும் ஆன்மிகம் வளர்வதற்கு கிரியின் பங்கு மிகவும் முக்கியமாக இருக்கறது” என்று தனது கருத்தை பதிய வைத்தார்.
மதுரை ஆதினம் அவர்கள், ” தர்மத்தை வளர்ப்பதற்கு நாம் அனைவரும் சேர்ந்து பாடுபடவேண்டும். இங்கு விற்கும் ஒவ்வொரு பொருட் களின் மூலம் கிரி அதை மக்களிடம் கொண்டு செல்ல பெரு முயற்சி எடுத்து வருகிறது. இன்னும் நிறைய இடத்தில் கிளைகளை நிறுவி, இவர்களது சேவை தொடரவேண்டும் என்று தனது வாழ்த்துரையில் தெரிவித்தார்
ஷோரூம் நேரம்
தினமும் காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை
முகவரி
எண். 101, எம்.ஜி. சாலை,
புதுச்சேரி – 605 001.
(ஸ்ரீ வேதபுரீஸ்வரர் கோயிலுக்கு எதிரில்)
தொடர்புக்கு
தொலைபேசி: +91 6369444020
மின்னஞ்சல்: pondymgroad@giri.in
GIRI பற்றி
1951-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட GIRI (Giri Trading Agency Private Limited), ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக பக்தர்களுக்குச் சேவை செய்து வருகிறது. ஆன்மிக நூல்கள் மற்றும் இசை, பூஜைப் பொருட்கள், தெய்வத் திருவுருவச் சிலைகள், பண்டிகைப் பொருட்கள், இயற்கை உணவுப் பொருட்கள், கொலு படி, பொம்மைகள், யந்திரங்கள், மாலை கள், கைவினைப் பொருட்கள் மற்றும் பாரம்பரிய ஆடைகள் உள்ளிட்ட பல்வேறு ஆன்மிக மற்றும் கலாச்சாரப் பொருட்களை GIRI வழங்கி வருகிறது.
தற்போது தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா, புதுச்சேரி, மகாராஷ்டிரா மற்றும் புதுதில்லி உள்ளிட்ட பகுதிகளில் 40-க்கும் மேற்பட்ட ஷோரூம்களை GIRI நடத்தி வருகிறது. மேலும், அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் உள்ள சர்வதேச வாடிக்கையாளர்களையும் சென்றடைகிறது.
2019-ஆம் ஆண்டு, “தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலாப் பயணிகளுக்கு உகந்த வணிக மையம்” (Best Tourist Friendly Shopping Centre in Tamil Nadu) என்ற விருதையும் GIRI பெற்றுள்ளது.
